Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மானமே போயிடுச்சு.. சேத்தன் சர்மா ஸ்டிங் ஆபரேஷன்.. ஆனா.. இதுல ஒரு நல்ல விஷயமும் இருக்கே.. இதை படிங்க!

ஆசிய கோப்பை, டி 20 உலகக் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணியின் தேர்வாளர் குழுவான சேட்டன் சர்மா தலைமையிலான குழு அப்படியே நீக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோக்கள் காரணமாக இந்திய அணிக்கு முக்கியமான நன்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது. இந்திய அணியின் தேர்வில் இனி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ இந்திய கிரிக்கெட் உலகை உலுக்கி உள்ளது. முக்கியமாக அவர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குறித்து வெளியிட்ட சில தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை ஜீ நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தி மூலம் வெளியிட்டு உள்ளது. இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவிடம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அவர் இந்த ஸ்டிங் ஆபரேஷனில் உளறிக்கொட்டிய சில விஷயங்கள் பின்வருமாறு,

இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இடையே மோதல்கள் இல்லை. ஆனால் அவர்களுக்கு இடையில் ஈகோ இருக்கிறது. இரண்டு வீரர்களுமே பெரிய வீரர்கள். அதனால் இவர்களுக்கு ஈகோ உள்ளது. அவர்கள் இருவருமே பெரிய ஸ்டார்கள் போல.

அமிதாப் பச்சன், தர்மேந்திரா இடையே ஈகோ இருந்தது போல இவர்கள் இடையே ஈகோ இருந்தது.

கங்குலி ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக எல்லாம் செயல்படவில்லை. ஆனால் அவர் கோலியை விரும்பவில்லை. கோலியை கங்குலி எப்போதுமே விரும்பியது இல்லை.

உளறல்

உளறல்

இந்திய அணியில் சில கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக இல்லை. அவர்கள் ஊசி போடுகிறார்கள். இவர்கள் வெறும் 80 சதவிகிதம் உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி போடுகிறார்கள்.

அவர்கள் வெறுமனே ஊசி போட்டுவிட்டு விளையாட தொடங்கி உள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் பெயின் கில்லர்கள் எடுப்பது இல்லை. அவர்கள் பெயின் கில்லர் எடுத்து இருந்தால் அது ஊக்க மருந்து போல ஆகிவிடும்.

அதிர்ச்சி தகவல்கள்

அதிர்ச்சி தகவல்கள்

விராட் கோலி கேப்டன்சியில் இருந்து நீக்கியத்தில் கங்குலிக்கு பங்கு இருப்பதாக கோலி நினைக்கிறார். ஆனால் பிசிசிஐ கூட்டத்தில் 9 பேர் இருந்தனர். அப்போது கங்குலி.. கோலியை கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம்.., ஒரு முறை யோசித்து பாருங்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால் அதை கோலி காதில் வாங்காமல் போய் இருக்கலாம். மொத்தம் 9 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டதால் கோலி அதை காதில் வாங்காமல் போய் இருக்கலாம் என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்.

நீக்கம்

நீக்கம்

இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் காரணமாக சேட்டன் சர்மா பதவியில் இருந்தே நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு உலகக் கோப்பைக்கு முன்பாக புதிய தேர்வு கமிட்டியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 2020 நவம்பரில் சேட்டன் சர்மா இந்திய தேர்வுக்குழுவிற்கு தலைவரானார். அவர் வந்த பின் எந்த ஐசிசி தொடரையும் இந்தியா வெல்லவில்லை. ஆசிய கோப்பை, டி 20 உலகக் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணியின் தேர்வாளர் குழுவான சேட்டன் சர்மா தலைமையிலான குழு அப்படியே நீக்கப்பட்டது. இந்த குழு மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டன.

மோசம்

மோசம்

கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தது, வருடம் முழுக்க பல்வேறு சோதனை முயற்சிகளை செய்துவிட்டு, வருட கடைசியில் அதே பழைய ணியை 2022 டி 20 உலகக் கோப்பை அணிக்கு அனுப்பியது, அணியில் மாற்று வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது என்று கடுமையான புகார்கள் வைக்கப்பட்டன. அதோடு சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது. இதையடுத்தே தேர்வுக்குழு மொத்தமாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தேர்வுக்குழுவிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நயன் மோங்கியா, மணிந்தார் சிங், சிவ சுந்தர் தாஸ், அஜய் ரத்ரா ஆகியோர் விண்ணப்பம் செய்தனர். ஆனால் கடைசியில் மீண்டும் சேத்தன் சர்மா இந்த பதவிக்கு தேர்வானார்.

சிக்கல்

சிக்கல்

ஏற்கனவே சரியாக செயல்படவில்லை என்றுதான் சேத்தன் சர்மா நீக்கப்பட்டார். அதன்பின் மீண்டும் அவரையே நியமனம் செய்தது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில்தான் சேத்தன் சர்மா தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதன் மூலம் அணி தேர்வில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேத்தன் சர்மா நீக்கப்படும் பட்சத்தில் வேறு "நல்ல" தலைமை தேர்வாளர் பணியில் அமர்த்தப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இந்த ஸ்டிங் ஆபரேஷன் காரணமாக இந்திய அணியின் மானம் கப்பல் ஏறினாலும்.. அதனால் நடந்த ஒரே நல்ல விஷயம் தேர்வுக்குழு மாற்றமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+