விராட் கோலி, டி வில்லியர்சிடம் இருந்து சத்தீஷ்கர் இளைஞருக்கு வந்த போன் கால்! ரஜத் படிதாருக்கு வந்த சோதனை
சென்னை: ஆர்சிபி இந்த முறை கோப்பை வெற்றி பெற காரணமாக இருந்த ரஜத் படிதாரின் செல்போன் எண் 90 நாட்கள் பயன்படுத்தாமல் இருந்ததால் அந்த எண் சத்தீஸ்கரை சேர்ந்த மற்றொரு நபருக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் ரஜத் படிதார் என நினைத்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் ஏபிடி வில்லர்ஸ் அந்த இளைஞருக்கு போன் செய்துள்ளனர். ரஜத் படிதாரும் அந்த இளைஞருக்கு போன் செய்து இந்த செல்போன் எண்ணை என்னிடம் விட்டு தர கோரி இருக்கிறாராம்.
ஆனால் அந்த இளைஞர் அதை எல்லாம் நம்பாமல் விட்டு இருக்கிறார். இந்த நிலையில் போலீஸ் வீடு தேடி வந்தபிறகே இளைஞர்கள் இதனை நம்பியுள்ளனர். தற்போது அந்த செல்போன் எண்ணை ரஜத் படிதாரிடம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார் அந்த இளைஞர்.

ரஜத் படிதார் செல்போன் எண்
பெங்களூர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ரஜத் படிதார். இவர் தனது செல்போன் எண்ணை 90 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்ததால், அவரது எண் செயல் இழப்பு ஆகியுள்ளது. டிராய் விதிகளின்படி 90 நாட்கள் வரை ஒரு எண் பயன்படுத்தாமல் இருந்தால் வேறு நபருக்கு ஒதுக்க முடியும். அந்த வகையில், ரஜத் படிதார் பயன்படுத்திய செல்போன் எண் சத்தீஷ்கரை சேர்ந்த மணிஷ் என்பவருக்கு கிடைத்துள்ளது.
புதிதாக ஜியோ சிம் வாங்கிய மணிஷ்க்கு இது கிரிக்கெட் வீரர் ரஜத் படிதார் பயன்படுத்திய நம்பர் என தெரியாது. எனினும், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன பிறகு வாட்ஸ் அப்பில் ரஜத் படிதார் படம் இருந்துள்ளது. இந்த நிலையில்தான், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரிடம் இருந்து இந்த எண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது.
சத்தீஸ்கர் இளைஞருக்கு போன் செய்த விராட் கோலி
ராஜ் படித்தாரிடம் பேச வேண்டும் என நினைத்து இருவரும் போன் செய்து இருக்கிறார்கள். இது குறித்த விஷயம் அறிந்ததும் ராஜ் படித்தாரும் அந்த எண்ணிற்கு போன் செய்துள்ளார். தனது நிலை குறித்து மனிஷ் மற்றும் அவரது நண்பர் கம்ராஜ்ஜிடம் தெரிவித்து இருக்கிறார். அந்த எண் தனக்கு மிகவும் முக்கியமானது என்றும், பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், பிரபலங்கள் பலரும் இந்த எண்ணிற்குதான் போன் செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், யாரோ கலாய்க்கிறார்கள் என நினைத்த அந்த இரு இளைஞர்களும், நாங்கள் தோனி என கிண்டலாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து, நான் உங்கள் வீட்டிற்கு போலீசாரை அனுப்புகிறேன் என எச்சரித்து இருக்கிறார் ரஜத் படிதார். சிறிது நேரத்தில், உள்ளூர் போலீசார் மனிஷ் வீட்டிற்கு வந்துள்ளனர். அவரிடம் நிலமையை எடுத்து சொல்லி நம்பரை விட்டுக்கொடுத்துவிடுமாறு பேசியுள்ளனர். அதன்பிறகுதான் போன் செய்தது உண்மையிலேயே ரஜத் படிதார் என்பதும் தனக்கு கோலி, டி வில்லியர்ஸ் கால் செய்துள்ளனர் என அறிந்து வியந்து போயுள்ளார்.
ரஜத் படிதாரிடம் வாங்கி கொடுத்துள்ளோம்
இது குறித்து காம்ராஜ் கூறுகையில், நான் விராட் கோலியிடம் எப்படியோ பேசிவிட்டேன். எனது வாழ்நாள் இலக்கை அடைந்துவிட்டேன்" என்றார். சத்தீஷ்கரில் உள்ள இளைஞர்கள் இருவருக்கு விராட் கோலி டி வில்லியர்ஸ் கால் செய்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- டெலிகாம் விதிகளின்படி ஒரு போன் எண் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும் முன்பாக 180 நாள்கள் டி ஆக்டிவேட் செய்யப்படும். தற்போது அந்த எண்ணை ரஜத் படிதாரிடம் வாங்கி கொடுத்துள்ளோம். தனது பழைய எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் குழப்பம் அடைந்த ரஜத் படிதார் மத்திய பிரதேச சைபர் செல் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பிறகே இந்த நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெங்களூர் அணி கேப்டன்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரஜத் படிதார், கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். தற்போது செல்போன் நம்பரால் ஏற்பட்ட இந்த குளறுபடி குறித்து வெளிப்படையாக கருத்து எதுவும் ரஜத் படிதார் தெரிவிக்கவில்லை. எனினும், ரஜத் படிதார் எண்ணை சில நாட்கள் வைத்து இருந்த மணிஷ் உலக புகழ் பெற்ற கிரிக்கெட் பிரபலங்களுடன் உரையாடிவிட்டோம் அது போதும் என மகிழ்ச்சியுடன் பேசி வருகிறாராம்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications