தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் ஐடி கார்டை காணவில்லை.. போலீசில் பரபர புகார்.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்வரி முதல் இவர் இந்த பதவியில் இருந்து வருகிறார். இவரது அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இவருக்கான அடையாள அட்டையை மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் தனது அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக அதனை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப எண்ணிய சத்ய பிரதா சாகு, அதற்காக தனது அடையாள அட்டையை தனது தனி செயலாளர் சரவணன் என்பவர் மூலம் தபாலில் அனுப்புவதற்காக கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதன்படி சரவணன், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டையை தபால் நிலையத்திற்கு எடுத்து சென்ற போது தவறவிட்டுள்ளார். இதையடுத்து சரவணன், தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானது குறித்து சென்னை கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரை பெற்ற கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் தேர்தல் அடையாள அட்டையே தொலைந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications