தீபாவளிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.. எப்படி தெரியுமா? வைரமுத்து விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூறாதது குறித்து பாஜகவினர் விமர்சித்து வருகிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கவிஞர் வைரமுத்து, முதல்வர் மு.க ஸ்டாலின் 'தங்கத்தால்' வாழ்த்து கூறியிருப்பதாக சொன்னார். கவிஞர் வைரமுத்துவின் பதிலை இங்கே பார்க்கலாம்.

நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த கவிஞர் வைரமுத்து அதில் கையொப்பமும் இட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:- நீட்டுக்கு எதிராக.. நீட் விலக்குக்கு ஆதரவாக இடப்பட்டு கொண்டிருக்கும் லட்சக்கணக்கான கையொப்பங்களில் என்னுடையதும் ஒன்று என்று பெருமைப்படுகிறேன். என் கடமையை நான் சரியாக ஆற்றியதாக கர்வப்படுகிறேன். நீட் என்பது சமூகத்திற்கு எதிரானது.. மாணவர்களுக்கு எதிரானது.. சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்து நகரத்தில் இருந்து கிராமம் வரைக்கு நீண்ட காலமாக பரவி இருக்கிறது.

 Chief Minister M.K. Stalin has greeted people Diwali Vairamuthus explanation

நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படுகிற ஒரு கல்வி அநீதி அல்லது எதிர்கால் அநீதி என்பதில் உணர்வந்தவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஏனென்றால் நீட் என்ற இந்த தேர்வில் ஒரு சமநிலை இல்லை. எழுதப்படுகிற தேர்வுகளில் எழுதுகின்ற மாணவர்களுக்கு ஒரு சமநிலையும் சமூக நீதியும் இல்லை. உதாரணமாக ஒரு அரசு பள்ளியில் படிக்கிற ஒரு மாணவர் ஒரு கூலித்தொழிலாளியின் மகனாக இருப்பான்.. ஒரு விரகுவெட்டியின் மகனாக இருப்பான். நாற்று நடுகின்ற ஒரு உழைக்கும் பெண்ணின் மகனோ இல்லை மகளோ நகரத்தில் இருக்கிற கல்வி முறையோடு போட்டி போடுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

சமூகத்தின் குரல்: ஏனென்றால் சிபிஎஸ்இ தேர்வில் படித்து வெளியில் வரும் மாணவர்களுக்கும் அரசு பள்ளி தேர்வில் படித்து தேர்வு எழுதிவிட்டு வரும் மாணவ கண்மணிகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் வேறுபாடு இருப்பதை இந்த சமூகம் நன்கு அறியும். எனவே தான் ப்ளஸ் டூ மார்க் அடிப்படையில் இந்த மாணவர்களுக்கு மருத்துவர் சேர்க்க ஒதுக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் ஆழ்ந்த குரலாக இருக்கிறது. அரசின் குரல் மட்டும் அல்ல. ஒரு பெரிய கல்வித்திட்டத்தின் குரல் மட்டுமல்ல. சமூகத்தின் குரல். ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.

மருத்துவத்தில் இடம்பெற வேண்டும் என்று போராடுகிற மாணவர்களுக்கு இந்த நீட் மரணத்தில் இடம் வாங்கி கொடுக்கிறது. இதுவரை நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு உயிரிழ மாணவர்களின் ஒரு பெற்றோர் உள்பட இதுவரை 16 பேரின் உயிர் பறிபோகியுள்ளது. தேர்வு என்று சொன்ன உடனேயே அடி வயிற்றில் இன்றைக்கும் எனக்கு பட்டாம் பூச்சி பறக்கிறது. நான் எம்ஏ தேர்வு எழுதிமுடித்துவிட்டு வெளியே வந்த போது இனிமேல் என் வாழ்வில் தேர்வு என்பது கிடையாது என்று வானத்தை நோக்கி கூவினேன்.

எனக்கே பயம் இருக்கிறது: கொஞ்சம் நன்றாக படிக்க தெரிந்த எனக்கே அந்த அச்சமும், பதற்றமும், ஒருவிதமான அவநம்பிக்கையும் நெஞ்சில் சூழ்ந்திருந்தது என்றால் ஏழை மாணவர்கள், சராசரி மாணவர்கள் என்ன ஆவார்கள். தேர்வு எழுதி எழுதியே இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வில் பாதியை கரைத்து விடுகிறார்கள் என்பதை இந்த சமூகம் நினைத்துகொள்ள வேண்டும். எனவே நீட்டுக்கு எதிராக.. நீட் விலக்குக்கு ஆதரவாக நாங்கள் இங்கே கையெழுத்து இடுகிறோம்.

இந்த கையொப்பம் என்பது தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒரே ஒரு வேண்டுகோள், நீங்கள் தலைகீழாக நின்றாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது என்று ஒரு கூட்டம் வாதிட்டுக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இளம் தலைமுறைகளுக்கு எதிரியாக இருக்க துணிந்துவிட்டீர்கள் என்று தான் அர்த்தம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிவிடுங்கள்..

தீபாவளி வாழ்த்து: குடியரசு தலவைர் அவர்களே நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து இட்டு தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூறாதது குறித்து பாஜகவினர் விமர்சித்து வருகிறார்களே அது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்து தீபாவளியை கொண்டாட வைத்தவரே முதல்வர் மு.க ஸ்டாலின் தானே..

உங்களுக்கு வாழ்த்து என்பது சொல்லால் வேண்டுமா? இல்லை செயலால் வேண்டுமா? சொல் என்பது பித்தளை.. ஆனால் செயல் என்பது தங்கம். நீங்கள் பித்தளையால் வாழ்த்து சொல்கிறீர்களா? இல்லை தங்கத்தால் வாழ்த்து சொல்கிறீர்களா? நம்ம முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் உங்களுக்கு தங்கத்தால் தீபாவளி வாழ்த்தை சொல்லியிருக்கிறார். அதுவே சிறந்தது என்று நான் நன்புகிறேன். என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+