ஸ்டாலினின் அதிரடி.. பள்ளி மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்.. வாவ்
சென்னை: ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
மேலும், மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்கள், மீன் வளர்ப்புக்குளங்கள், பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தையும் (iTNT) காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த மையம் ரூ.54.61 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் இதற்காக திட்டம் அறிவிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் மற்றும் தொடர்சங்கிலி உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி என பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க இந்த தொழில்நுட்ப மையம் உதவியாக இருக்கும். மாநிலத்தின் தொழில்நுட்ப துறைக்கு உத்வேகத்தை ஏற்படுத்தவே இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. டீப் டெக்னாலஜி துறை செயல்படும் அண்ணா பல்கலைக்கழகம் இதற்கு ஏற்ற இடம் என்பதால்தான் இங்கு இந்த தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 25,000 சதுர அடி பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications