தேர்தல் வியூகம்.. திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. பேசியது என்ன?
சென்னை: ஸ்பெயினில் இருந்தபடியே திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் அதிகம் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கும் போதிலும், பல கூடுதல் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இம்மாத தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

அதில் பல லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அடுத்தகட்ட நடவடிக்கையாக வெளிநாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள முதல்வர் வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்ய முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஸ்பெயினில் இருந்தபடியே திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் எ.வ.வேலும், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுதான் தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது.
எனவே, நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகளின் கருத்து என்னவாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்துள்ளார். கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கிய சில தொகுதிகளில் திமுகவே நேரடியாக போட்டியிட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனை தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுடனும் முதல்வர் முக ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இன்று ஆலோசனையை காணொலி வாயிலாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் நடத்தியுள்ளார். திருச்சி, பெரம்பலூர் தொகுதியுடன் இன்று தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த இரு தொகுதிகளுமே கடந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் திருச்சி தொகுதியை மதிமுக கேட்டு வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள நிர்வாகிகளின் கருத்துக்களை தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கேட்டு வருகிறது. அதேபோல், பெரம்பலூர் தொகுதியில் கடந்த முறை ஐஜேகே போட்டியிட்டது. இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications