மேஜர் குட்நியூஸ் .. இல்லதரசிகளே ரெடியாக இருங்க.. முதல்வர் ஸ்டாலினே அனுப்பி வைக்க போகும் எஸ்எம்எஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் வங்கி கணக்கில் வரப்போகிறது. சுமார் 1.06 கோடி பெண்களுக்கு கிடைக்க போகிறது. செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலினே அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை தொடர்பாக எஸ்எம்எஸ் அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

கலைஞர் மகளிர் உரிமை தொகை வரும் 15ம் முதல் வங்கி கணக்கில் வரப்போகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் விநியோகிக்கப்பட்டது. மொத்தம் 1.62 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். அரசு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே தரப்போவதாக அறிவித்தது. தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்க பிரத்யேகமாக சாப்ட்வேர்களை பயன்படுத்தியது. இதன்படி சுமார் 57 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Chief Minister mk Stalin likely send sms with major good news about magalir urimai thogai

ஆனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது குறித்தும், நிராகரிக்கப்பட்டது குறித்தும் வரும் செப்டம்பர் 15ம் தேதி தான் மக்களுக்கு தெரிய போகிறது. அன்று தான் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் சார்பில் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த எஸ்எம்எஸ் இல் விண்ணப்பங்கள் நிராகரிப்பா, ஏற்கப்பட்டதா என்பது தெரியவரும்.

இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசும் போது, "தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.

ஏடிஎம் கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏடிஎம் கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல், வரும் 15-ம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

Chief Minister mk Stalin likely send sms with major good news about magalir urimai thogai

அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும்.

அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள். சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம், மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+