ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிச்சாமி டிஸ்சார்ஜ் - 3 நாட்கள் வீட்டில் ஓய்வு
குடலிறக்க அறுவைச்சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 3 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் முதல்வர் பழனிச்சாமியை அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை: குடலிறக்க அறுவைச்சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு அவர் 3 நாட்கள் முழு ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நள்ளிரவு ஊரடங்கு, ஞாயிறு கிழமை லாக்டவுன் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ள நிலையில் வீட்டில் முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு அவர் 3 நாட்கள் முழு ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications