ஸ்டாலின் கிஃப்ட்! ரோந்து போலீசாருக்கு ரூ.300 சிறப்பு படி! சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாதம் 2 நாள் லீவு
சென்னை : இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் முதல் காவல் ஆய்வாளர் வரை உள்ளவர்களுக்கு சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் எனவும், 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு சென்னை கோட்டையில் நடைபெற்று வருகிறது.
இன்று சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு துறை அமைச்சரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
அப்போது காவல்துறையினருக்கும் பயனளிக்கும் வகையில் என்பது ஒரு புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், " தமிழ்நாட்டில் விரைவில் புதிதான 3000 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக ஆட்சியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மதுவிலக்கு பிரிவு மறுசீரமைப்பு செய்யப்படும்.

இடர் படி உயர்வு
அத்துடன் சென்னையில் 3 மண்டலங்களில் போக்குவரத்து கண்காணிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். காவலர்களுக்கு இடர்படி தொகை உயர்த்தி வழங்கப்படும். காவல் ஆய்வாளர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ30 லட்சத்திலிருந்து 60 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சமூக ஊடகங்களை கண்காணிக்க ஊடக மையம் அமைக்கப்படும். திருவாரூரின் முத்துப்பேட்டையில் 12 கோடி ரூபாய் செலவில் புதிய பயிற்சி இல்லம் கட்டப்படும்.

சிறப்பு படி மாதம் ரூ.300
இரவு பணிக்கு செல்லும் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை உள்ளவர்களுக்கு சிறப்பு படி மாதம் ரூ.300 வழங்கப்படும். வார விடுமுறை போலீசாருக்கு மட்டும் உள்ளது என்பதை இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதன்மூலம் 10,508 பேர் பயனடைவார்கள்.

சிறப்பு புலனாய்வு குழு
மூன்றாவதாக இணைய தள சூதாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்து கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்." உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை காவலர்கள் வரவேற்றுள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications