அரக்கோணம் ரூட்டில் போறவங்க கவனிங்க.. நாளை முதல் ஜூன் 19 வரை இந்த 5 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் பயணிக்கும் லட்சக்கணக்கான தினசரி ரயில் பயணிகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல புறநகர் ரயில்கள் மற்றும் மெமு சேவைகள் மே 17 முதல் ஜூன் 19 வரை ரத்து மற்றும் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.. இந்த மாற்றங்கள் உங்கள் அன்றாட பயணத்தை நேரடியாக பாதிக்குமா என்பதை இங்கே பார்க்கலாம்..

ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, மே 17 முதல் மே 31 வரை அரக்கோணம் - திருத்தணி இடையில் அதிகாலை 4:00, 5:00, மற்றும் 6:25 மணிக்கு புறப்படும் மூன்று ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Arakkonam

அரக்கோணம் டூ சென்னை

இதேபோல் திருத்தணியிலிருந்து இரவு 9:15 மற்றும் 11:10 மணிக்கு திரும்பும் இரண்டு ரயில்களும் இந்த காலகட்டத்தில் இயங்காது.. ஆக, மொத்தம் 5 ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன..

அரக்கோணம் யார்டில் மே 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களிலும் தண்டவாள தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கு முக்கிய காரணம்.. பணிகள் முடிந்தாலும் சில சேவைகள் மே 31 வரை ரத்தாகவே இருக்கும்..

ரயில்கள் ரத்து - யாரை பாதிக்கும்?

முழு ரத்துக்கு அப்பால், பகுதி ரத்தும் நிறைய பயணிகளை பாதிக்கும்.. சென்னை மற்றும் அரக்கோணம் இடையே காலை 10:30 முதல் இரவு 10:55 மணி வரை இயங்கும் பல சேவைகள் திருவாலங்காடு - அரக்கோணம் பகுதியில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதாவது இந்த ரயில்கள் திருவாலங்காடு வரை வந்து நிறுத்தப்பட்டுவிடும்.. அரக்கோணம் செல்ல வேண்டியவர்கள் மாற்று வழியை தேட வேண்டிய நிலை உருவாகும்..

அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை மற்றும் மூர் மார்க்கெட் நோக்கி வரும் காலை மற்றும் மாலை நேர ரயில்களும் திருவாலங்காட்டில் இருந்தே பயணத்தை தொடங்கும்.. இந்த மாற்றம் அரக்கோணம் அருகே வசிக்கும் தினசரி பயணிகளுக்கு தலைவலியாக மாறும்..

திருத்தணி சேவைகள் மாற்றம்

திருத்தணி நோக்கி அதிகாலை 4:30 மற்றும் மதியம் 12:35 மணிக்குப் புறப்படும் இரண்டு ரயில்களும் திருத்தணி - திருவாலங்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.. இந்த ரயில்களை நம்பி திருத்தணி செல்பவர்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்வது அவசியம்..

மூர் மார்க்கெட், திருச்சானூர், அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களை இணைக்கும் 4 மெமு சேவைகளும் ஜூன் 6 முதல் 19 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.. மேலும் ஜூன் 19 அன்று மட்டும் அரக்கோணம் வழியாக வேலூர், திருப்பதி மற்றும் மூர் மார்க்கெட் செல்லும் 4 மெமு ரயில்களும் ஒரே ஒரு நாள் முழுமையாக ரத்தாகும்..

இந்த ரத்து அறிவிப்புகள் வேலூர் மாவட்ட பயணிகளையும் நேரடியாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..
லட்சக்கணக்கான தினசரி பயணிகளை சென்னையுடன் இணைக்கும் புறநகர் ரயில் சேவையில் இந்த அளவுக்கு நீண்ட இடையூறு ஏற்படும்போது, மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படுகிறதா என்று ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டாமா..?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+