16 ஏக்கர் தரிசு காடு... இன்று பொன்விளையும் பூமி..! ஸ்டாலின் அள்ளித்தந்த ஆச்சரியம்! பைசா செலவில்லை!
சென்னை: பல துறைகளில் தமிழ்நாடு, இந்தியாவில் முதல் மாநிலமாக இருந்து வருகிறது. அதைப்போல் இந்திய அளவில் வேளாண் உற்பத்தியை உயர்த்தி, முதல் 3 இடங்களுக்குள் தமிழ்நாட்டைக் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.
வெறும் முடிவு மட்டுமல்ல; அதற்காக இதுவரை இல்லாத ஒரு முன்னோடி முயற்சியை அவர் செய்து காட்டியும் இருக்கிறார். அது என்ன? வேளாண்துறைக்கு எனத் தனி பட்ஜெட்டை போட்டது இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான்.

அதன் அடுத்தகட்டமாகத் தமிழ்நாட்டில் கூடுதலாக இருக்கின்ற 11.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களைச் சீர்படுத்தி அவற்றில் பயிரிடச் செய்து, தற்போதுள்ள 60% சாகுபடி பரப்பை 75% ஆக உயர்த்தி, 10லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்களை அடுத்த 10 ஆண்டுக்குள் 2 மடங்காக உயர்த்தி, அதாவது 20 லட்சம் ஹெக்டேராக மாற்ற முதல்வர் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.
என்ன இந்த இரண்டு வரிகளை மூச்சு விடாமல் படித்ததற்கே தலை சுற்றுகிறதா? அப்படி என்றால், அந்த லட்சியத்திற்காக உழைக்கும் அரசு எந்திரத்திற்கு இது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

மேலே சொன்னது மட்டும் அல்ல இலக்கு. இன்னும் இருக்கிறது. உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு போன்ற பயிர்களை அதிகளவில் மகசூல் செய்து, இந்தியாவில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழ்நாட்டின் வேளாண்துறையை உயர்த்துவதே இந்த அரசின் கொள்கையாகச் சொல்லப்பட்டுள்ளது.
அதற்கான ஒரு முன்னோடி திட்டம்தான் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். இது என்ன என்கிறீர்களா?

வேளாண் தோட்டக்கலைப் படித்த பட்டதாரிகளைத் தொழில்முனைவோர் ஆக்கி, அதன் மூலம் மகசூலைப் பெருக்குவதற்குத்தான் இதன் இலக்கு. அதற்கு அரசே மானியம் வழங்கி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 16 ஏக்கர் தரிசு நிலம் பொன்விளையும் பூமியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இளைஞர் ஒருவர் தன் வாழ்நாள் விவசாய கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவியன் ரிச்சர்ட். இவர் 'அக்ரி கிளினிக்' கடை வைத்திருக்கிறார். எம்.எஸ்.சி., அக்ரி படித்த பட்டதாரி இவர்.
"கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நான் பயனடைந்திருக்கிறேன் படித்து முடித்த உடன் உரக்கடை வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கான பொருளாதார வசதி இல்லை. அப்போதுதான் வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள். கலைஞர் திட்டத்தின் கீழ் இளம் தொழில்முனைவோரை உருவாக்க அரசு மானியம் தருகிறது என்றும் அறிவுரை அளித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை மானியமாகக் கிடக்கும் என்றார்கள். ஆகவே நான் அதற்கு விண்ணப்பித்தேன். விதை, பூச்சிக்கொல்லி மருந்து, உரம் ஆகிய மூன்று விவசாயிகளுக்கு எளிதாகப் போய்ச் சேர நாம் உதவவேண்டும். அவர்களுக்குப் பயனுள்ளதாக வாழவேண்டும் என்பதுதான் என் இலட்சியமாக இருந்தது.
அந்த நேரத்தில் அதிகாரிகளும் உதவ முன்வந்ததால் உடனடியாக கடனுக்கு விண்ணப்பித்துக் கடன்பெற்று இந்தக் கடையைத் தொடங்கினேன். சுமார் 3 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறேன்" என்றவர் இடைவெளிக்குப் பின் மீண்டு சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப அடிப்படையிலான விவசாயம் பற்றிய விவரங்கள் தெரியாது. இந்தக் கடையை நான் ஆரம்பித்த பிறகுதான் பலரும் என்னிடம் வந்து ஆலோசனைப் பெற்றுச் செல்கிறார்கள். தினம் குறைந்தது 50 பேராவது வருகிறார்கள்.
இதைப்போன்று இதே திட்டத்தின் கீழ் தங்களின் ஊர்களில் விளைச்சலுக்குப் பயன்படாமல் கிடக்கும் தரிசு நிலங்களைப் பசுமையாக மாற்ற அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்மூலம் புதுக்கோட்டை மாவடம் வீரப்பட்டி கிராமத்தில் பயனற்று கிடந்த தரிசு நிலம் இன்று பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமாகியது?

"இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நிலம் பல வருடங்களாகத் தரிசு நிலமாகக் கிடந்தது. அதை மாற்றி இன்றைக்குப் பசுமையாக்கி இருக்கிறோம். இதன் மூலம் 16 பேர் பயனடைந்துள்ளனர். இந்த இடம் மொத்தம் 18 ஏக்கர். வெறும் குப்பை மேடுபோல கிடந்த நிலத்தை மாற்றி, மாங்கன்றுகள் நட்டுள்ளோம். அதற்குச் சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விட்டு வருகிறோம். இந்த மாங்கன்றுகளை வேளாண்துறை சார்பில் கொடுத்தார்கள்.
இப்போது நாங்கள் நட்டுள்ள மாங்கன்றுகள் 2 ஆண்டுகளில் வளர்ந்து காய்கள் வைக்க ஆரம்பித்துவிடும். மூன்று ஆண்டுகளில் நிச்சயம் எங்களுக்கு மகசூல் கிடைக்கத் தொடங்கிவிடும். முன்பு யாருக்குமே பயன் இல்லாமல் கிடந்த இந்த நிலம், இப்போது ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யக் கூடிய பூமியாக மாறியுள்ளது.

இந்த நிலத்தைச் சுத்தம் செய்து பதப்படுத்திய பிறகு அரசாங்கம் சார்பில் ஆழ்துளைக் கிணறு போட்டுத் தந்தார்கள். அந்தத் தண்ணீரை வைத்துத்தான் இப்போது சொட்டு நீர்ப் பாசனம் செய்து வருகிறோம்.
மாங்கன்றுகள் மட்டும் இல்லாமல், ஊடுபயிராக தர்ப்பூசணியை விதைக்க இருக்கிறோம். அதுவும் விளைந்தால் கூடுதலாக எங்களுக்கு வருமானம் கிடைக்கும்" என்கிறார் இந்தத் திட்டத்தால் பயன்பெற்ற இளைஞர்.
விவசாயி ஸ்ரீதேவி, "எனக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அது புதர் மண்டிக் கிடந்தது. அதை வேளாண்துறை சார்பாகச் சுத்தம் செய்து, நிலத்தைச் சீர்படுத்திப் போர் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். மின்சார இணைப்பையும் இலவசமாகக் கொடுத்துள்ளார்கள். அந்த நிலத்தில் நடுவதற்காக மாங்கன்றுகள், கொய்யா கன்றுகள், எலுமிச்சை செடிகளைத் தந்துள்ளார்கள்.

இதற்கு இடையில் ஊடுபயிராகக் கடலை, உளுந்து ஆகியவற்றைப் போட இருக்கிறோம். தரிசாகக் கிடந்த நிலத்தைச் சீர்படுத்தி, பொன்விளையும் பூமியாக மாற்றித் தந்துள்ளார்கள். இதைச் செய்து தந்த அதிகாரிகளுக்கு நன்றி. இப்படி ஒரு சிறப்பான திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைப் பசுமையாக மாற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கும் நன்றி.
இன்னும் 2 ஆண்டுகளில் இந்த நிலத்திலிருந்து எங்களுக்கு வருமானம் கிடைக்கப்போகிறது. அதை நினைத்தாலே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மொத்தம் 18 பேர் சேர்ந்து இதைச் செய்து வருகிறோம்" என்கிறார் தெம்பான குரலில்.

தமிழ்நாடு அரசு உழவர் நலத்துறையின் மூலமாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டம் புலியூர் பஞ்சாயத்து வீரப்பட்டி கிராமத்தில் உள்ளது இந்தத் தரிசு நிலத் தொகுப்பு. இங்கு இருந்த 16 ஏக்கர் நிலத்தை 18 விவசாயிகளுக்குப் பிரிந்து வழங்கி இருக்கிறோம்.
இந்த 16 ஏக்கருக்கும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் சொட்டு நீர்ப் பாசன வசதியை சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 711 ரூபாய் செலவில் செய்து தந்துள்ளோம். 1020 மாங்கன்றுகளும் 130 எலுமிச்சைக் கன்றுகளும் இலவசமாக அளித்துள்ளோம்.

இதனால் ஒரு பைசா இந்த மக்களுக்குச் செலவில்லை. நிலத்தைச் சுத்தப்படுத்தியது முதல் மரக்கன்றுகள் தந்தது வரை அனைத்தும் அரசே செய்து தந்துள்ளது. ஆகவே அதன் மூலம் வேளாண்மை செய்து அவர்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.
இந்தத் திட்டம் தொடங்கியபோதே இந்த 18 விவசாயிகளின் பெயருக்குப் பட்டா எல்லாம் முறையாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிற்காலத்தில் நிலம் சார்ந்த பிரச்சினைகள் அவர்களுக்கு உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளது" என்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி.

-
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications