”இலவசங்கள் அல்ல.. சமூகநீதி திட்டங்கள்” பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: நாட்டில் இலவசங்கள் கூடாது என்று அறிவுரை கூற புதிதாக சிலர் வந்திருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சமீப வாரங்களாக இந்தியாவில் அரசியல் கட்சியினர் இடையே மக்களுக்கு வழங்கப்படும் இலவசம் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளே காரணம். அண்மையில் உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வாக்குகளை பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் ஆபத்து நிறைந்தது. நாட்டின் அரசியலில் இருந்து அவை நீக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடி
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இலவச கலாச்சாரம் மிக ஆபத்தானது. இந்த கலாச்சாரத்துடன் இணைந்திருப்பவர்கள், புதிய விரைவுசாலைகளை, புதிய விமான நிலையங்களை அல்லது பாதுகாப்பு பகுதிகளை உங்களுக்காக கட்டமைக்கவே மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் வீழ்த்த வேண்டும் என பேசினார்.

தமிழக அரசு
இதுமட்டுமல்லாமல் இலவச அறிவிப்புகள் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள கலாலீஸ்வரர் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவசங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கல்வி கட்டணமில்லை
அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் மட்டுமின்றி 2ம் ஆண்டு மாணவர்களும் கல்வி பயில கட்டணமில்லை. இதனை யாரும் குறைவாக மதிப்பிடக் கூடாது. அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தோடு, அரசு செய்யும் கடமை தான் இது.

இலவசம் பற்றி ஸ்டாலின்
இலவசங்கள் வேறு, சமூக நலத் திட்டங்கள் வேறு என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. இப்போது இலவசங்கள் பற்றி நாட்டில் பெரும் விவாதமே சென்றுக் கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்காக செலவு செய்வது இலவசம் கிடையாது. இதுதொடர்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் இலவச திட்டங்கள் அல்ல. சமூகநீதி திட்டங்கள் என்று தெரிவித்தார்.

மறைமுக விமர்சனம்
தொடர்ந்து, இலவசங்கள் கூடாது என்று புதிதாக அறிவுரை கூறுவதற்கு சிலர் வந்திருக்கிறார்கள். அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. இதற்கு மேல் பேசினால் அரசியல் ஆகிவிடும். அதனால் இதற்குமேல் பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு பின் பாஜக உடன் மோதல் போக்கை தமிழக அரசு தவிர்த்து வந்தது. இந்த நிலையில் அரசு நிகழ்ச்சியிலேயே பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications