அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை? அடிக்கடி ஆய்வு நடத்துங்க! முதல்வர் ஸ்டாலின் போட்ட புது உத்தரவு
சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார்.
நோய்கள் புதுப்புது அவதாரம் எடுத்து வருவதல், அதனை வெல்லும் முறைகளும் பன்முனை கொண்டதாக மாற வேண்டும் என முதல்வர் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

அடிக்கடி தணிக்கை
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி தணிக்கை செய்து, அங்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதா? மருத்துவமனைகளுக்கு என்ன தேவைகள் என்பதைக் கண்டறிந்து, குறைகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

தடுப்பூசியில் முன்னிலை
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வு - சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் மிக உயர்ந்த குறியீடுகளை அடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழ்நாட்டில், 100 விழுக்காடு பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.

தமிழ்நாடு முதலிடம்
இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிசிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை வகித்து கொண்டிருக்கிறது. உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உலகளவில் முதலிடம் தமிழ்நாடு.இதேபோல் மருத்துவ வளர்ச்சி அனைத்திலும் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடுதல்கள் வேண்டும்.

நவீனமயமாக சிகிச்சை
சுகாதாரக் குறியீடுகளை வைத்து மருத்துவமனைகளை தரவரிசைப் படுத்துகிறார்கள். இந்த தரவரிசையில் பின்னடைந்துள்ள மருத்துவமனைகளை முன்னே கொண்டு வர வேண்டும். மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை சீர்செய்தால் மட்டும் போதாது. மருத்துவத் துறை - மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும். சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும்.

புதுப்புது அவதாரம்
நோய்கள் புதுப்புது அவதாரம் எடுத்து வருகிறது. அதனை வெல்லும் முறைகளும் பன்முனை கொண்டதாக மாற வேண்டும். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்திக் குறைவை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவர்களும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படியானால் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவதற்கு அரசின் சார்பில் என்ன மாதிரியான திட்டமிடுதலைச் செய்யலாம் என்பதையும் நாம் ஆராய வேண்டும்.












Click it and Unblock the Notifications