வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு! ஸ்டாலின் மீது எடப்பாடி அட்டாக்
சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அன்று வீராவேசமாக பேசிய முதல்வர் ஸ்டாலின் தற்போது டாஸ்மாக்... தியாகி... தம்பிக்காக நிதி ஆயோக் கூட்டத்துக்கு பங்கேற்க போகிறாராம் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார் எனவு விமர்சித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து எக்ஸ் தள பதிவில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

யார் அந்த தம்பி
"மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் முதல்வர் ஸ்டாலின் தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்... இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு! #யார்_அந்த_தம்பி என்ற ஹேஸ் டேக்குடன் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக்கில் ஈடி ரெய்டு
டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவதாகவும் மதுபான ஆலைகள், டாஸ்மாக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பொய் கணக்கு காட்டி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது ஆயிரம் கொடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்ருள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை 17- ஆம் தேதி நள்ளிரவு நிறைவு பெற்றது.
ஆகாஷ், ரித்தீஷ் தலைமறைவு
சென்னை எம்ஆர்சி நகரில் வசிக்கும் ரத்தீஷ் என்பவர் உடன் விசாகன் ஐஏஎஸ் தொடர்பில் இருந்ததாகவும், எந்த மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என ரத்தீஷ் விசாகனுக்கு அறிவுறுத்தியதாக சில வாட்ஸப் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியானது. மேலும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருக்கிறார். மேலும் ரத்தீஷும் தற்போது தலைமுறைவாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டம்
ரத்தீஷ் திமுக இளைஞரணி தலைவரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ரத்தீஷ் யார்? திமுகவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளது? உதயநிதி ஸ்டாலினுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது எப்படி? டாஸ்மாக் மேலாண் இயக்குனருக்கு மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிடும் அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்றவரா? என பல்வேறு கேள்விகளை அதிமுக எழுப்பி வருகிறது.
இத்தகைய சூழலில் நிதி ஆயோக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதை சுட்டிக்காட்டி, எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 24 ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications