இந்த அரசு அல்ல, உங்க அரசும் இல்ல, இது நம்ம அரசு! நரிக்குறவ மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை அருகே ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், யூடியூபில் பேசிய மாணவிகள் திவ்யா, அஸ்வினி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசியதோடு, இது நம்ம அரசு என பேசி நரிக்குறவ மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனைத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

அதனை நிறைவேற்றும் வகையில் இன்று ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு அமைக்கப்பட்டுள்ள அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், உயர்மின் கோபுரம், சாலை வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை ஆய்வு செய்த முதல்வர்,அப்பகுதி மக்களுக்கு முதியோர் உதவித் தொகை, முதலமைச்சர் காப்பீடு திட்டம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்வருடன் செல்ஃபி

முதல்வருடன் செல்ஃபி

முன்னதாக தங்கள் பகுதிக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த நரிக்குறவர் இன மக்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து முதல்ல ஸ்டாலினுக்கு இட்லி கறிக்குழம்பு திடீர் என வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் அங்கிருந்த சிறுமி ஒருவருக்கு முதல்வர் இட்லி ஊட்டி விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் முதல்வருக்கு அப்பகுதி மக்கள் முதல்வருக்கு பாசி மாலைகளை பரிசாக அளித்தனர்.

உதவிகள் தேடி வரும்

உதவிகள் தேடி வரும்

பின்னர் நரிக்குறவ இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " நரிக்குறவ மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். பெண்களின் முன்னேற்றத்தை மாணவி அஷ்வினியின் வடிவில் பார்க்கிறேன் திவ்யாவின் வடிவில் பார்க்கிறேன். அதனால்தான் அவர்களை கோட்டையிலே எனது அறைக்கு வரவழைத்து பேசினேன். மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது இது முடிவல்ல மேலும் அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் தேடி வரும்

அனைவருக்குமான அரசு

அனைவருக்குமான அரசு

மக்களுக்கு தேவையானதை இந்த அரசு செய்யும் இந்த அரசு அல்ல, உங்கள் அரசும் அல்ல, இது நம்ம அரசு நாம் அனைவருக்குமான அரசு. இதுவரை இதுவரை மக்கள் கேட்காமலேயே நூற்றுக்கணக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை அப்படித் தான் இனிமேலும் அப்படித்தான்.மக்கள் நன்றாக இருந்தால் நான் மட்டுமில்லை சமூகமே நன்றாக இருக்கும். காரம் சாப்பிட்டால் உடல் வலுவாக இருக்கும் என்பதை தற்போது தெரிந்து கொண்டேன் என முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+