எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு.. சட்டசபையில் நிமிர்ந்து பார்த்த எம்எல்ஏக்கள்
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மரபுப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சி தலைவரின் இருக்கைக்கு அருகே அமைக்க வேண்டும் என பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும். 4 முறை சபாநாயகரை சந்தித்தும் பல முறை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்தும் கடிதங்களை வழங்கி இருக்கிறோம்.

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபுப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சி தலைவரின் இருக்கைக்கு அருகே அமைக்க வேண்டும்,"என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பல முறை கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்கு முன்பாக இருந்த சட்டசபை தலைவர் தனபால் இருக்கை விவகாரத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டாரோ, அதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தாங்களும் பலமுறை அவையில் தெரிவித்துள்ளீர்கள். எனினும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,என்று சபாநாயகர் அப்பாவுக்கு வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆர்.பி.உதயகுமார் புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அதிமுக தரப்பில் இது தொடர்பாகச் சபாநாயகருக்கும் கடிதம் தரப்பட்டுள்ளது. அதாவது இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதால் அங்கே ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.. இருப்பினும், சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு என்பது சபாநாயகரின் தனிப்பட்ட முடிவு என்றே சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார்.
சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பேசியது திமுக, அதிமுக எம்எல்ஏக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications