சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு.. நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு முதலமைச்சர் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று வழங்குகிறார்.

Recommended Video

    MK Stalin கொடுத்த நலத்திட்டம் | நரிக்குறவர் Ashwini வீட்டுக்குச் சென்ற முதல்வர்

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழ்நாடு அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இருப்பினும், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்னதானம் வழங்க மறுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக நரிக்குறவ பெண் ஒருவருக்குப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    Chief Minister to provide welfare schemes for Narikuravar and Irular people

    இதையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதே பெண்ணுடன் அமர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலில் அன்னதானத்தில் உணவு உண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைலரானது,

    அதேபோல மற்றொரு காணொலியில் அந்த பெண் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க அரசு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில் கடந்த 2 நாட்களே மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்திற்குத் தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தீபாவளி பண்டிகையான வியாழக்கிழமை மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 57 நரிக்குறவர்கள் 24 இருளர் குடும்பங்களுக்கு முதல்வர் வீட்டுமனை பட்டாவை வழங்குகிறார்.

    வீட்டுக்காவலில் இருந்த 2 தென் கொரியர்கள் செய்த செயல்.. வேதனையடைந்த நீதிபதி.. அதிரடி உத்தரவு! வீட்டுக்காவலில் இருந்த 2 தென் கொரியர்கள் செய்த செயல்.. வேதனையடைந்த நீதிபதி.. அதிரடி உத்தரவு!

    English summary
    welfare schemes for Narikuravar and Irular people. Tamilnadu govt latset news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X