அந்த லெட்டர்.. ஏற்க முடியாது.. "தவிர்த்துடுங்க".. பட்டென சொன்ன தலைமை செயலாளர்.. இதுதான் இறையன்பு!
சென்னை: தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய முக்கியமான லெட்டர் ஒன்று அதிகாரிகள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக தற்போது இறையன்பு செயல்பட்டு வருகிறார். இவரை தலைமை செயலாளராக தேர்வு செய்த போதே அது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்களில் ஒருவர் வெ. இறையன்பு. 8க்கும் அதிகமான பட்டங்களை படித்துள்ள இவர், காஞ்சிபுரம் ஆட்சியர் பதவி உட்பட 10க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழக அரசில் பணியாற்றி இருக்கிறார்.

முக்கிய புத்தகங்கள்
இவர் போர் தொழில் பழகு புத்தகம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். இந்த நிலையில்தான் தமிழ்நாடு வளர்ச்சி துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் சிறந்த புத்தகங்களுக்கான பரிசுக்கு இவருடைய புத்தகம் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2018ல் வெளியான நூல்கள் போட்டிக்கு அழைக்கப்பட்டு, அதற்கு பரிசுகள் இந்த வருடம் வழங்கப்பட உள்ளது.

மூளைக்குள் சுற்றுலா
இந்த புத்தக விழாவில் மூளைக்குள் சுற்றுலா என்ற இறையன்பு எழுதிய புத்தகமும் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில புத்தகங்கள் பரிசுக்கு தேர்வாகி உள்ள நிலையில் இறையன்பு எழுதிய புத்தகமும் பரிசுக்கு தேர்வாகி இருக்கிறது. ஆனால் இவர் தலைமை செயலாளராக இருக்கும் போது அவருடைய புத்தகத்திற்கு தமிழ்நாடு அரசின் ஒரு துறை பரிசு வழங்குவது சரியாக இருக்காது.

உதாரணம்
இது நல்ல உதாரணமாக இருக்காது என்பதால், அவர் இந்த பரிசை ஏற்க மறுத்து இருக்கிறார். தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மகேசன் காசிராஜனுக்கு இது தொடர்பாக இறையன்பு கடிதமும் எழுதி இருக்கிறார். அதில், 2018ல் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான் எழுதிய மூளைக்குள் சுற்றுலா புத்தகமும் தேர்வாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 2021ல் புத்தகம் இதற்கு தேர்வு செய்யப்பட்டாலும், இப்போது நான் தலைமை செயலாளராக இருக்கும் போது பரிசை பெறுவது ஏற்புடையதாக இருக்காது.

நல்லதல்ல
இப்போது நான் தலைமை செயலாளராக இருக்கும் போது பரிசை பெறுவது ஏற்புடையதாக இருக்காது. அதனால் எனக்கு வழங்கப்படும் பரிசை தவிர்த்துவிடுங்கள் என்று இறையன்பு கடிதம் எழுதி இருக்கிறார். தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதம் அதிகாரிகள் இடையே கவனம் பெற்றுள்ளது. தலைமை செயலாளர் என்பதால் பரிசை மறுத்த இவரின் முடிவை வரவேற்பை பெற்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications