10ம் தேதி முதல் புதிய சிக்கல்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
சென்னை: சில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் 3-ந் தேதியில் இருந்தும் (அதாவது இன்று), அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறியிருக்கின்றன. அவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்,
இதுகுறித்து அனைத்து துறையின் செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறுகையில், "சில அங்கீகரிக்கப்படாத அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் 3-ந் தேதியில் இருந்தும் (அதாவது இன்று), அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறியுள்ளன.

எனவே இந்த சூழ்நிலையில் ஏற்கனவே கூறியுள்ள அறிவுரைகளை நினைவூட்ட விரும்புகிறேன். அதன்படி, வேலை நிறுத்தம் அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது அல்லது அதுபோன்ற போராட்டங்களில் அரசு ஊழியர் பங்கேற்பது போன்றவை அரசின் அன்றாட செயல்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறுவதாக அமைந்துவிடும்.
எனவே உங்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி, இதுபோன்ற போராட்டத்தில் நடத்தை விதிகளை மீறி ஈடுபட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும்.
இந்த போராட்டத்தில் ஈடுபடும் நோக்கத்தில் யாரும் அலுவலகத்திற்கு வராமல் இருந்தால், அவர்களுக்கு 'பணியில்லை, சம்பளமும் இல்லை" என்ற அடிப்படையில், அந்த நாட்களை அங்கீகரிக்கப்படாத 'ஆப்சென்ட்' நாளாக கருதி, ஊதியமோ, படியோ வழங்கக்கூடாது. அவர்கள் மீது 17-பி விதிப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த போராட்ட காலகட்டத்தில் அளிக்கப்படும் தற்செயல் விடுப்பு உள்ளிட்ட வேறு எந்தவித விடுப்பு என்றாலும் (மருத்துவ விடுப்பு தவிர) அதை அனுமதிக்கக்கூடாது. போராட்டத்தில் ஈடுபடும், தினக்கூலி அடிப்படையிலான பகுதி நேர ஊழியர்கள், வேலையில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
மருத்துவ விடுப்பு கோரப்பட்டால் அதன் உண்மைத்தன்மையை மருத்துவ வாரியத்துக்கு அனுப்பி உறுதி செய்ய வேண்டும். அந்த மருத்துவ விடுப்புக்கான காரணம் சரியில்லை என்று தெரிய வந்தால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போராட்டத்தால் அரசுப் பணிகள் பாதிக்காதபடி மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு நேரக்கூடாது.
போராட்டம் முடியும் வரை பணியாளர்களின் வருகைப் பதிவு தொடர்பாக தினமும் காலை 10.15 மணிக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications