எதிர்பார்த்ததை விட மோசம்! பாகிஸ்தானுக்கு சீனா செய்த பெரிய உதவி! கண்டுபிடித்த இந்திய பாதுகாப்புப்படை
டெல்லி: கடந்த மே 10ம் தேதி நிறைவு பெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் உதவிகளை வழங்கியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்தியா முன்னர் கருதியதை விட கூடுதலாக சீனா இந்த மோதலில் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்று அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்கள் எங்கே உள்ளன, போர் விமானங்கள் எந்த ஹேங்கரில் உள்ளன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை திறம்பட கண்டறிய சீனா தனது ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உதவியது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டுப் போர் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற படுகொலைக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்குவதற்கும் இடையிலான 15 நாள் இடைவெளியில் சீனா பல தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது. இந்தியா மீதான தனது செயற்கைக்கோள் கவரேஜை சரிசெய்ய சீனா பாகிஸ்தானுக்கு உதவியது என்று அவர் கூறினார். இந்த இடைவெளியில் பல செயற்கோள் தகவல்கள், போர் திட்டமிடல் தொடர்பான பல தகவல்களை சீனா இந்தியாவிற்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

சீனாவின் தலையீடு
இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான்.
இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கத்து சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் சாட்டிலைட் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதேபோல் சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு நிறைய உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதாவது சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க சாட்டிலைட்டை இமேஜ்களை அனுப்பி.. அதை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை அனுப்பி கூடுதலான இடத்தில் எல்லாமே இயக்க ஆட்களையும் அனுப்பியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
அதாவது இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட ஆழமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சில ஆயுதங்களை சீனா சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகளின் தீவிரமான சப்போர்ட் பாகிஸ்தானுக்கு இருந்தது. உதாரணமாக துருக்கி , சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்த டிரோன்களை பாகிஸ்தானிடம் தந்து சீனா சோதனை செய்ததாகவும், சீனாவின் சில ஏவுகணைகளையும் சீனா பாகிஸ்தான் வழியாக சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications