ஒருபக்கம் மீ டூ... இன்னொரு பக்கம் ஒரு தெய்வம் தந்த பூவே.. சின்மயி செம பிஸி!
வைரமுத்து பாடலை இசை நிகழ்ச்சி ஒன்றில் சின்மயி பாடினார்.
சென்னை: மீ டூ விவகாரம் ரணகளமாக போய் கொண்டிருக்கும் இந்த வேளையில், வைரமுத்துவை வறுத்தெடுத்து வரும் இந்த வேளையில், அவர் எழுதிய பாடலையே பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் சின்மயி.
கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சின்மயி சொன்னதில் இருந்தே தமிழகம் சூடாகி கிடக்கிறது. சமூக வலைதளங்கள் எல்லாமே பரபரப்பாகி உள்ளன.

திரைப்பட பாடல்கள்
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பாடல் கச்சேரி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் இருவரும் பங்கேற்று திரைப்பட பாடல்களை பாடினர். இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு தெய்வம் தந்த பூவே
இந்த நிகழ்ச்சியில் சின்மயி, திரைத்துறையில் கால்பதித்த முதல் படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடலை பாடினார். வைரமுத்துவின் வரிகளில் எழுதப்பட்ட இந்த பாடல் சின்மயிக்கு உலகளவில் பெயரையும் புகழையும் பெற்று தந்த பாடலாகும்.

ரசிகர்கள் ஆரவாரம்
இந்த பாடலை சின்மயி பாட தொடங்கிய உடனேயே வளாகத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாக குரல் எழுப்பினர். வளாகமே ரசிகர்களின் கைதட்டலால் அதிர்ந்தது. இதனை தொடர்ந்து சில ஹிந்தி பாடல்களை மட்டும் பாடிவிட்டு நிகழ்ச்சியை முடித்தார் சின்மயி.

மக்களிடம் சலசலப்பு
ஒருபக்கம் மீ டூ... இன்னொரு பக்கம் ஒரு தெய்வம் தந்த பூவே என்று சின்மயி பாடிய விவகாரம் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications