சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரைக் காப்பாற்ற என் மகனை போலீஸ் கைது செய்துள்ளது.. சித்ராவின் மாமனார் பரபர கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் யாரைக் காப்பாற்ற தன் மகன் ஹேமந்தை போலீசார் கைது செய்திருக்கிறார்கள் என அவரது தந்தை ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவசர கதியில் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    யாரைக் காப்பாற்ற என் மகனை போலீஸ் கைது செய்துள்ளது.. சித்ராவின் மாமனார் பரபர கேள்வி - வீடியோ

    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், 6 நாள் விசாரணைக்கு பின்னர் அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின,.

    முல்லையாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் சித்ரா. ஆர்ஜேவான சித்ரா படிப்படியாக திரைஉலகில் நட்சத்திரமாக உருவெடுத்தார். இவரை சித்ரா என்று அழைப்பதை விட முல்லை என்று தான் பல வீடுகளில் இன்றும் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் நிறைந்து இருந்தவர் இப்போது உயிருடன் இல்லை.

    சித்ரா அணிந்தது கால்ஸ் படத்தில் பயன்படுத்திய நைட்டி.. ரொம்ப பிடிச்சிருக்குனு கேட்டு வாங்கிய சோகம்சித்ரா அணிந்தது கால்ஸ் படத்தில் பயன்படுத்திய நைட்டி.. ரொம்ப பிடிச்சிருக்குனு கேட்டு வாங்கிய சோகம்

    ஓட்டலில் தற்கொலை

    ஓட்டலில் தற்கொலை

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சித்ரா கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் நடந்த இச்சம்பம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை பதிவு திருமணம் செய்த ஹேமந்தை போலீசார் பிடித்து துருவி துருவி விசாரித்தனர்.

    கடன் சுமை

    கடன் சுமை

    இதில் பல தகவல்கள் வெளியாகின. திருவான்மியூரில் சித்ரா வாங்கிய வீடு, சொகுசு கார் வாங்கியது, இவற்றிற்கு சித்ரா அதிக அளவில் கடன் வாங்கியதும் தெரியவந்தது. அதை அடைப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் கடன் சுமை ஏறிய நிலையில் மறுபக்கம் குடும்ப செலவுகளை பார்க்க வேண்டியதிருந்திருக்கிறது.

    தயக்கம்

    தயக்கம்

    இப்படியான ஒரு சூழலில் தான் ஹேமந்திற்கும் சித்ராவிற்கும் திருமணம் முடிவாகி இருந்தது. இதனிடையே தனது மகளை ஹேமந்திற்கு திருமணம் செய்து வைக்க சித்ராவின் தாய்க்கு தயக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கிறது.

    தூக்கு மாத்திரை

    தூக்கு மாத்திரை

    இதனிடையே ஹேமந்த்திற்கு சித்ரா ஆண்களுடன் நெருக்கமாக நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்தாக கூறப்பபடுகிது. இதனால் ஒரு கட்டத்தில் சித்ராவை நடிக்க வேண்டாம் என்று சொல்லியதாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளத. ஏற்கனவே ஒரு முறை இதன் காரணமாக தூக்குமாத்திரை தின்று சித்ரா தற்கொலைக்கு முயற்சிருக்கிறார்.

    செத்து தொலை

    செத்து தொலை

    இந்நிலையில் கடந்த 9ம் தேதி சித்ராவுக்கும் ஹேமந்த்திற்கும் இடையே நசரத்பேட்டை ஓட்டலில் தகராறு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகருடன் ஏன் கட்டிப்பிடித்து நடனமாடினாய் என்று ஹேமந்த் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது மனம் உடைந்த சித்ரா நீ இல்லாமல் இருக்க முடியாது என்று ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார். இதை காதில் வாங்காத ஹேமந்த் செத்து தொலை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    யாரை காப்பற்ற கைது

    யாரை காப்பற்ற கைது

    இதையடுத்து 6 நாள் விசாரணைக்கு பின்னர் சித்ராவின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே சித்ரா தற்கொலை தொடர்பாக இரண்டாம் கட்ட விசாரணையாக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று நடிகை சித்ராவின் மாமானார்,மாமியாரிடம் 4 மணி நேரமாக மேற்கொண்ட ஆர்.டி.ஓ விசாரணை நிறைவடைந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன். அவசர கதியில் என் மகனை கைது செய்து விட்டார்கள். யாரை காப்பாற்றுவதற்காக இந்த கைது நடைபெற்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அவசரகதியில் கைது

    அவசரகதியில் கைது

    ரவிச்சந்திரன் மேலும் கூறுகையில், ஆறு நாட்களாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று ஆர்டிஓவிடம் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினோம். இன்று என்னுடைய மகன் விசாரணையில் கலந்து கொண்டு அவர் தரப்பு நியாயத்தை கூறியிருக்க வேண்டும். ஆனால் நேற்று அவசர கதியில் அவரை கைது செய்து விட்டார்கள். என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை யாரை காப்பாற்றுவதற்காக இந்த கைது சம்பவம் நடந்தது என்று எனக்கு புரியவில்லை. சித்ராவிடம் இருந்து பணமோ பொருளோ எப்போதும் நாங்கள் கேட்டதில்லை. வரதட்சணை கொடுமை இல்லை. என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் என்றுதான் கூறியிருந்தோம்" என்றார்.

    English summary
    Hemanth's father Ravichandran says police have arrested his son Hemanth to save anyone in the Chitra suicide case. Chitra's father-in-law Ravichandran alleged that the police had arrested Hemnath in an emergency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X