"இது"தான் சித்ராவின் கடைசி ஆசை.. நொறுக்கிதள்ளிய ஹேமந்த்.. நிராசையாய் போன பரிதாபம்.. கதறும் ரசிகர்கள்
சித்ராவின் கடைசி ஆசைகள் எதுவுமே நிறைவேறவில்லை
சென்னை: சித்ரா என்னவெல்லாம் ஆசைப்பட்டாரோ, அது எதுவுமே நடக்கவில்லை என்பதே பரிதாபம்.. இதை தான் அவரது ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
யாரை கேட்டாலும் சித்ரா ஒரு தைரியமான பெண், சித்ரா ஒரு போராளி, சித்ரா கோழை அல்ல, சித்ரா அன்பானவள், சித்ரா உழைப்புக்கு முக்கியம் தருபவர், சித்ரா ஒரு வைராக்கியமான பெண் என்ற பல கருத்துக்கள்தான் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சித்ரா என்றாலே பாசிட்டிவ் என்று சொல்லும் அளவுக்கு அவரை பற்றின செய்திகள் இந்த வாரம் முழுக்க வந்து கொண்டிருக்கிறது. அதேமசயம், சித்ரா ஆசைப்பட்டது எதுவுமே நடக்கலையே என்று அவரது ரசிகர்களும் நண்பர்களும் கண்ணீர் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

முத்து
விஜய் டிவி புகழ் மதுரை முத்து ஒரு பேட்டியில் சொல்கிறார், "பெண் கலைஞர்கள் தொகுப்பாளராக பெயர் எடுக்குறது ரொம்பவே கஷ்டம்... அவங்க வெளிநிகழ்ச்சிகளில் மேடை ஏறினாலே, பலரின் பார்வையும் பலவிதமா இருக்கும்... ரசிகர்களோடு எடுத்துக்கொள்ளும் ஒரு போட்டோகூட, இந்த சோஷியல் மீடியா காலத்துல பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும். பெண் கலைஞர்களுக்குத்தான் அதிக பிரச்சனை. இத்தனையும் தாண்டி இருக்கிறார் சித்ரா. விஜய் டிவியில சிறந்த நடிகைக்கான விருது வாங்கறதுதான் சித்ராவின் பெரிய ஆசையா இருந்துச்சு" என்று கலங்கி சொல்கிறார்.

கல்யாணம்
அதேபோல, தனக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்ததுதான் என் மிகப்பெரிய சொத்து என்று சித்ரா சொல்வராம்.. அதனால், முகம் தெரியாத எத்தனையோ ரசிகர், ரசிகைகளின் வீட்டுக்கு அவர்களுக்கே தெரியாமல் சென்று சர்ப்ரைஸ் தந்துள்ளார்.. இப்படி தன்னை கவர்ந்த ரசிகர்களை, தன்னுடைய கல்யாணத்துக்கு கூப்பிட வேண்டும் என்று சித்ரா ஆசைப்பட்டாராம்.. அவர்களுக்கு ஒரு விருந்தும் தர வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லி கொண்டே இருந்தாராம். கடைசியில் அதுவும் நடக்கவில்லை.

விஜய்
அதேபோல, நடிகர் விஜய்யின் தீவிரமான விசிறியான சித்ரா, "விஜய் வயதாக வயதாக வயதாக இளமையாகி கொண்டே போகிறார்... அவரை என்னுடைய கல்யாணத்துக்கு நிச்சயம் கூப்பிடுவேன்.. அதனால்தான் அவரை இன்னும் பார்க்க கூட முயற்சி செய்யவில்லை" என்று ஒரு வீடியோவில் சித்ரா தெரிவித்துள்ளார்.. இந்த வீடியோவை சித்ரா ரசிகர்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த ஆசையும் சித்ராவுக்கு நிறைவேறவில்லை.

ஹேமந்த்
சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது, எல்லா நண்பர்களையும் அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட முடியவில்லையாம்.. இதை பற்றி கேட்ட நட்பு வட்டாரத்தில், கண்டிப்பாக கல்யாணத்துக்கு கூப்பிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. இவர்கள் எல்லாரையும் கல்யாணத்துக்கு அழைக்க வேண்டும் என்றுதான், ஹேமந்திடம் இறப்பதற்கு முந்தைய நாட்களில் கேட்டு வந்துள்ளார்.. ஆனால் அதற்கும் ஹேமந்த் எந்தவித ஒத்துழைப்பையும் தராமல் இருந்துள்ளார். இப்படி, தான் ஆசைப்பட்டது எதுவுமே நிறைவேறாமலேயே சித்ராவின் உயிர் பிரிந்துள்ளது!
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications