சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்.. நாடு முழுவதும் ஒரு சிகரெட் விலை ரூ.8.50 வரை அதிகரிப்பு!
சென்னை: நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு அறிவித்த கூடுதல் கலால் வரி விதி இன்று முதல் அமலுக்கு வருவதால் இன்று முதல் சிகரெட்டின் விலை கடுமையாக உயர்கிறது. 40 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கலால் வரி சேர்த்து, ஒரு சிகரெட் விலை ரூபாய் 8.50 வரை உயர்கிறது.
இன்று முதல் புகையிலை பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தபடுகிறது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான வரி என அதிகபட்சமாக 40 % ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் செஸ் வரிக்கு பதிலாக புதிய கலால் வரி விதிக்கப்படுகிறது. இதனால், இன்று முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது.

சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டுக்கு ரூபாய் 2.05 முதல் ரூபாய் 8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ வரை நீளமுள்ள குறுகிய ஃபில்டர் இல்லாத சிகரெட்டுகளுக்கு ஒரு சிகரெட்டுக்கு சுமார் ரூபாய் 2.05 கூடுதல் வரி விதிக்கப்படும், அதே நேரத்தில் அதே நீளம் கொண்ட ஃபில்டர் சிகரெட்டுகளுக்கு சுமார் ரூபாய் 2.10 கூடுதல் வரி விதிக்கப்படும். 65 - 70 மிமீ நடுத்தர நீளமுள்ள சிகரெட்டுகளுக்கு ஒரு சிகரெட்டுக்கு சுமார் ரூபாய் 3.60 முதல் ரூபாஉ 4 வரி விதிக்கப்படும், மேலும் 70-75 மிமீ நீளமுள்ள பிரீமியம் சிகரெட்டுகளுக்கு சுமார் 5.40 ரூபாய் வரி விதிக்கப்படும்.
மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது. கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதி ஆண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6 - 8% அளவு குறையக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த வரி மாற்ற நடவடிக்கை, வரி ஏய்ப்பைக் குறைத்து வருவாய் வசூலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான் மசாலா உற்பத்தியாளர்கள் இப்போது பிப்ரவரி 1 முதல் புதிய சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ் புதிய பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து பேக்கிங் இயந்திரங்களையும் உள்ளடக்கிய சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் மற்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு வீடியோ பதிவுகளை சேமிக்க வேண்டும். கூடுதலாக, நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உற்பத்தி திறன் குறித்து கலால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ள இன்று முதல் நாடு முழுவதும் சிகரெட், பான் மசாலா பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் முன்கூட்டியே சில வியாபாரிகள் சிகரெட்டுகளை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க உள்ளனர். மேலும், விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்ததால், புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
புதிய வரி vs பழைய வரி முறை: ₹15 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு எது பெஸ்ட்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications