Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தியேட்டர் உரிமையாளர் டூ தாசில்தார்.. சென்னையில் கோடி ரூபாய் நிலம்.. அரசு அதிகாரிக்கே நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலத்தை சேர்ந்த மேரிவர்கிஸ் என்பவர் தமிழக சமூக நலத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். இவருக்கு சென்னை கொளத்தூரில் 1.5 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 500 சதுரஅடி காலி நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் கிரையப்பத்திரம் செய்து சிலர் அபகரித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சினிமா தியேட்டர் அதிபர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இன்றைக்கு நில அபரிகப்பை தடுக்க எவ்வளவோ வசதிகளை அரசு கொண்டு வந்துவிட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஆங்காங்கே போலி ஆவணங்களை தயாரித்து நில அபகரிப்பு செய்திருப்பது பல்வேறு வழக்குகளின் மூலம் தெரியவந்துள்ளது. நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள்தான் பிரதானமாக இருக்கிறது.

Cinema theater owner arrested in connection with land grab of female government official in Chennai

நிலத்தின் உண்மையான ஆவணங்களை எப்படியோ நகல் வாங்கி அதனை வைத்து, போலி ஆவணங்களை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கி, உடனே அதனை ஏமாந்தவர்கள் தலையில் கட்டி சில புரோக்கர்கள் விற்றும் விடுகிறார்கள்.. அதாவது போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யும் புரோக்கர்கள், அதனை பல கைகளுக்கு மாற்றிவிட்டு, அப்படியே அபகரிக்கவும் செய்கிறார்கள். இதனை சில காலங்கள் கழித்து, தாமதமாக அறியும் நிலத்தின் உரிமையாளர், கடைசியில் போலீஸ், நீதிமன்றம் என்று அலைந்து, நிலத்தை மீட்க போராட வேண்டியுள்ளது. அப்படியான ஒரு சம்பவம் அரசு ஊழியருக்கே நடந்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த 65 வயதாகும் மேரிவர்கிஸ் என்பவர் தமிழக சமூக நலத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். இவர் அண்மையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் மேரி வர்கீஸ் கூறுகையில், " எனக்கு சென்னை கொளத்தூரில் எ ரூ.1½ கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 500 சதுரஅடி காலி நிலம் இருக்கிறது.

அந்த நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் கிரையப்பத்திரம் செய்து சிலர் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். இதை அண்மையில் நான் அறிந்து கொண்டேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், உதவி கமிஷனர் சிபுகுமார், இன்ஸ்பெக்டர் ஆதவன் பாலாஜி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், நில அபகரிப்பில் ஈடுபட்டதாக கொளத்தூரை சேர்ந்த 64 வயதாகும் சீனிவாசன் , மணலியை சேர்ந்த 50 வயதாகும் இளஞ்செழியன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சீனிவாசனுக்கு சொந்தமாக கொளத்தூரில் கங்கா சினிமா தியேட்டர் இருக்கிறது. கைதான இளஞ்செழியன் சீனிவாசனின் உறவினர் ஆவார். அவர் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். இந்த வழக்கில் தாசில்தார் ஒருவர் மீதும், பத்திரப்பதிவு அதிகாரி ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+