சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு.. சென்னையில் கோலம் போட்ட பெண்களை கைது செய்த போலீஸ்.. பெரும் பரபரப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெசன்ட் நகர் பகுதியில் கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் சில இடங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சட்ட திருத்தம் காரணமாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான சண்டை வந்துள்ளது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை 5 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 7 பேர் பெசன்ட் நகர் பகுதியில் வித்தியாசமான முறையில் போராட்டம் செய்தனர். சாலையில் கோலம் போட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் சில பெண்கள் கல்லூரி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலம் போட்டு போராட்டம்

கோலம் போட்டு போராட்டம்

அவர்கள் தங்கள் கோலத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக வாசகங்களை எழுதி இருந்தனர். அதன்படி நோ என்ஆர்சி, வேண்டாம் குடியுரிமை சட்ட திருத்தம், வேண்டாம் என்ஆர்சி போன்ற வசனங்களை எழுதி இருந்தனர். பாஜகவிற்கு எதிராகவும் சில வசனங்கள் இடம்பெற்று இருந்தது.

போலீசார் நிலை

போலீசார் நிலை

இந்த நிலையில் போலீசார் கோலம் செய்து போராட்டம் நடத்திய பெண்களை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை கமிஷ்னர், பெண் போலீசார் போலீசார் மூலம் 7 பேரையும் கைது செய்தனர்.இதற்கு எதிராக பெண்களிடமும் குடும்ப உறுப்பினர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டனர்

விடுதலை செய்யப்பட்டனர்

இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அனுமதி இன்றி போராட்டம் செய்தததாகவும், சாலையில் வண்ணம் வரைந்ததாகவும், அனுமதி இன்றி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் கூடியதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

English summary
Citizenship Amendment: Chennai police arrested 7 people for the Rangoli protest in Besant Nagar beach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X