அனிதாவை பார்த்ததுமே.. பச்சைக்கிளி டூ பாயும் புலி.. புல்லரித்து போகும் ஃபேன்ஸ்.. இது பிக்பாஸ் கூத்து
பிக்பாஸ் போட்டியாளர் அனிதாவுக்கு ஆதரவுகள் அதிகமாகி வருகின்றன
சென்னை: முதல்நாள் சிரிச்சிக்கிட்டே வந்த அனிதாவை பார்த்ததுமே பச்சைக்கிளின்னு நினைச்சோமே.. இப்போதானே அது பாயும் புலின்னே தெரியுது எங்களுக்கு என்று பிக்பாஸ் போட்டியாளர் அனிதா குறித்து நெட்டிசன்கள் சிலாகித்து பேசி வருகின்றனர்.
பிக்பாஸ் ஆரம்பித்து 4 நாள்தான் ஆகிறது.. அதற்குள் சண்டை, கட்டிப்பிடி, கருணை, நட்பு என்ற உணர்வுகள் சுடர்விட ஆரம்பித்துள்ளது. இதில் ஹைலைட்டாகி உள்ளது அனிதா - சுரேஷ் சண்டைதான்.. இதுவரை வெளியான புரோமாக்களும் இவர்களை சுற்றிதான் உள்ளது.

"சிலர் வணக்கம் சொன்னால் எச்சி தெறிக்கும்" என்று சுரேஷ் சின்னதாக ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிக்க, அனிதா அதை திரித்து, செய்தியாளர்கள் வணக்கம் சொன்னால் எச்சி தெறிக்குமா' என்று கேட்டு அந்த வீட்டையே ரெண்டாக்கிவிட்டார்.
ஆனால், இதில் முதலில் கண்டிக்கத்தக்கது சுரேஷ் பேச்சைதான்.. என்ன இருந்தாலும் அந்த வார்த்தையை சுரேஷ் சொல்லி இருக்க கூடாது.. சிலர் என்று குறிப்பிட்டு சொன்னாலும், இதற்கு சுரேஷ் மன்னிப்பு கேட்டுதான் ஆக வேண்டும்.. குறைந்தபட்சம் வருத்தத்தையாவது சொல்ல வேண்டும்.. அட்லீஸ்ட் அனிதாவிடமாவது சொல்லி இருக்கலாம்.. ஆனால், இப்போது வரை தான் பேசியது சரியென்றே பிடிவாதம் காட்டி வருவது அவரது வயதுக்கு சரியானதாக இல்லை.
அதேபோல, அனிதா இந்த விஷயத்தை சற்று பெரிதாக்கிவிட்டாலும் கூட, சமாதானத்துக்கு சட்டென இறங்கிவிடும் குணமும் அனிதாவிடம் உள்ளது.. 'எமோஷனல் இடியட்' என்றும்,"எனக்கு தேவையில்லாத கெட்டப்பெயரை வாங்கிதரதுக்கு தான் அவர் பாக்குறாரு என்றும் உசுப்பேத்தும் அனிதாவின் வார்த்தைகளை கேட்டு அவரது ரசிகர்கள் டென்ஷன் ஆகி உள்ளனர்.
அனிதாவை பார்த்ததுமே, அந்த பளீர் சிரிப்பு எங்களுக்கு பிடித்துவிட்டது.. அனிதாவின் ரசிகர்களாகிவிட்டோம்.. ஒருத்தருடைய பலவீனத்தை குறிவைத்து, மேலும் மேலும் வம்பிழுப்பது சரியில்லை.. அப்படித்தான் சுரேஷ் பண்ணிட்டு இருக்கிறார்.. பச்சைக்கிளிதான், அதுக்காக பாயும் புலியாக மாறினாலும் தப்பில்லைதான் என்கிறார்கள் அனிதாவின் ஃபேன்ஸ்!
இருந்தாலும் இந்த எச்சில் பஞ்சாயத்து என்று தீருமோ?!
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications