சென்னையை சுத்துப்போட்ட மேகங்கள்.. மழை அதிகரிக்கப்போகுதாம்.. வெள்ளம் வருமா? வெதர்மேன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛டிட்வா' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடலில் நிலை கொண்டுள்ளது. இன்று இரவு முதல் நாளை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை அதிகரிக்க உள்ளது. தற்போது சென்னையை நோக்கி தீவிரமாக மேகங்கள் நகர்ந்து வருவதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான‛டிட்வா' புயல் தான். இந்த புயல் தற்போது வலுவிழந்தது. இருப்பினும் கூட ‛டிட்வா' புயல் ‛எபெக்ட்' இன்னும் உள்ளது.

cloud-moving-into-north-and-central-chennai-and-centurie-from-tiruvallur-in-some-places-says-tamil

இதற்கிடையே தான், வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே மையம் கொண்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை வரை மீண்டும் மழை அதிகரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இன்று இரவு 10.15 மணிக்கு பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மழை மேகங்கள் நகரும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில் ‛‛வடக்கு மற்றும் மத்திய சென்னையை நோக்கி நேரடியாக மேகக்கூட்டங்கள் தீவிரமாக நகர்வதை பார்க்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் நூறு மில்லிமீட்டர் (10 செமீ) மழை பதிவாக வாய்ப்புள்ளது'' என கூறியுள்ளார். இந்த பதிவுக்கு சிவபாலாஜி என்பவர், ‛‛வெள்ளத்துக்கு ஏதாவது வாய்ப்புள்ளதா? என கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு, பிரதீப் ஜான், ‛‛நோ'' என்று கூறியுள்ளார். அதாவது மழை வெள்ளத்துக்கு வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+