சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமா.. சசிகலாவை முதல்வர் விமர்சிப்பதில்லையே.. "இது"தான் காரணமா.. அசரடிக்கும் அஸ்திரங்கள்!

எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனை ஓபனாக அட்டாக் செய்து பேசுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் சசிகலாவின் வருகை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் வியூகங்கள் ஒவ்வொன்றும் மலைக்க வைக்கும்படி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

சசிகலா வெளியே வந்துள்ளார்.. ஆனால், அவர் என்ன முடிவில் இருக்கிறார்? அவரது அடுத்த மூவ் என்ன என்பது சரியாக தெரியவில்லை.. இன்னும் செய்தியாளர்களை கூட சந்திக்காமல் இருக்கிறார்..

முக்கிய ஆலோசனைகளை நேற்றே மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே காய்களை நகர்த்த ஆரம்பிப்பார் என தெரிகிறது.

வருகை

வருகை

இதனிடையே, சசிகலாவின் வருகை எடப்பாடியார் தரப்புக்கு கலக்கத்தை தருவதாகவும், அந்த கலக்கம் ஒருசில செயல்பாடுகள் மூலமாக தெரியவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், யதார்த்தம் அதுவல்ல.. முதல்வர் மிக கச்சிதமாக மட்டுமல்ல, ஜாக்கிரதையாகவும் அரசியல் செய்கிறார் என்பதே உண்மை.. சசிகலா சிறையில் இருந்து வருவதற்கு முன்புவரை, அமமுக என்ற பேச்சையே தன் பிரச்சாரங்களில் முதல்வர் எடுத்தது இல்லை..

 சசிகலா

சசிகலா

ஆனால், இப்போது சசிகலா சென்னை வந்த பிறகு, முதல்வரின் வேலூர், அரக்கோணம், ஆம்பூர், திருப்பத்தூர், பிரச்சாரங்களில் அமமுக நெடியே அதிகம் வீசி வருகிறது. "தினகரன், 4 வருஷமா அலைஞ்சு அலைஞ்சு பார்த்தார்.. 10 வருஷமா கட்சியிலும் கிடையாது.. இப்போ சதிவலை பின்னி கொண்டு இருக்கிறார்... அவர் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும், அதிமுகவை உடைக்க முடியாது" என்பது உட்பட பல விஷயங்களை முதல்வர் சொல்லி கொண்டே போகிறார்.. இந்த பிரச்சாரங்களில் எல்லாம் கவனித்தால் ஒன்று விளங்குகிறது..

 குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

டிடிவி தினகரனின் பெயரை பகிரங்கமாக சொல்லி விமர்சிக்கும் முதல்வர் சசிகலாவின் பெயரை சொல்வதில்லை... அப்படி பெயர் சொல்லி விமர்சித்ததும் இல்லை.. சசிகலாவுக்கு கட்சியில் இடம் இல்லை என்பதைதவிர பெரிதாக வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது வைப்பதில்லை.. அதேசமயம் டிடிடிவி தினகரனையும் சும்மா விடுவதில்லை.. இதற்கெல்லாம் என்ன காரணம்? என்பது குறித்து ஒருசில நிர்வாகிகளிடம் பேசினோம்.. அவர்கள் அனுமானத்தில் சொன்னதாவது:

 அதிமுக தலைமை

அதிமுக தலைமை

"டிடிவி தினகரன் மீது முதல்வருக்கு மட்டுமில்லை, பெரும்பாலான அமைச்சர்களுக்கு கோபம் உள்ளது.. நேற்று சிவி சண்முகம் பேச்சுகூட அதைதான் நிரூபித்திருக்கும்.. 2017-ல் சில அமைச்சர்களை பிரித்து கொண்டு போனது, ஆட்சியை கவிழ்க்க நினைத்தது வரை டிடிவி தினகரன் தான் காரணம் என்பதில் அதிமுக தலைமைக்கு கோபம் இன்னமும் இருக்கிறது..

கோபம்

கோபம்

அதனால்தான் டிடிவியின் பெயரை டேமேஜ் செய்தால், அதன்மூலம் அவரது ஆளுமை கட்டுப்படுத்தப்படும், அவர் மீது மக்களின் கோபம் திரும்பும், அப்படி திரும்பினால் அது அமமுகவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும், அதன்மூலம் சசிகலாவின் வீரியமும் குறையும் என்று கணக்கு போடப்படுகிறது.. அதுமட்டுமல்ல, சசிகலா மறுபடியும் கட்சிக்குள் வந்தால், குடும்ப உறவுகள் என்று சொல்லி கொண்டு மறுபடியும் இந்த குரூப் உள்ளே நுழைந்துவிடும் என்று அதிமுக தலைமை யோசிக்கிறது..

 சுயேட்சை

சுயேட்சை

இப்போதைக்கு சசிகலா எந்த கட்சியிலும் இல்லை.. ஒருவேளை தீர்ப்பு அவங்களுக்கு சாதகமாக வந்துவிட்டால்கூட, சுயேச்சையாகதான் போட்டி போடணும்.. அதிமுகவுக்குள் வர முடியாது.. இதைதவிர, டிடிவியை விமர்சித்து கொண்டே இருந்தால், அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கு வந்துவிடும்... இதைதவிர திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களும் அமமுகவுக்கு சென்றுவிடாமலும் கட்டுப்படுத்தப்படும்.. அதனால்தான் தினகரன் திமுகவின் பி-டீம் என்ற ஒரு விஷயத்தை பேசி வருகிறார்கள்.

 அமமுக

அமமுக

இதுல இன்னொரு விஷயமும் இருக்கு.. அமமுகவுக்கு தென்மண்டலங்களில் ஓரளவு வாக்குகள் உள்ளன.. இப்போதே டேமேஜ் செய்து வருவதால், தென்மண்டல வாக்குகளையும் சிதைத்து அதையும் தன் பக்கம் இழுக்கலாம் என்ற மெகா பிளானும் இருக்கிறது.. சுருக்கமாக சொல்லணும்னா, சசிகலாவின் பெயரை எடுக்காமலேயே, டிடிவி தினகரனை வைத்தே அமமுகவை டேமேஜ் செய்து சசிகலாவை ஓரங்கட்டுவதுதான் எடப்பாடியாரின் பலே பிளான் என்று தெரிகிறது.

English summary
CM Edapadi Palanisamy slams TTV Dinakaran directly, not Sasikala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X