சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டிரெண்ட்" ஆன #எடப்பாடியார்... அடுத்தடுத்து அதிரடி.. திக்குமுக்காடி போன தமிழகம்!

ட்விட்டரில் டிரெண்ட் ஆனார் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: இந்த நாள் தமிழகத்துக்கு மிக முக்கியமான நாள்.. ஒரே நாளில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு மாஸ் காட்டி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. வேறு ஏதாவது அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்வீட் ஷாக் தந்து அசத்திவிட்டார் முதல்வர். அதனால்தான் இன்று ட்விட்டர் முழுக்க எடப்பாடியார் டிரெண்டாகி கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

Recommended Video

    கூட்டுறவு வங்கி… விவசாயிகள் கடன்: ரூ. 12,110 கோடி தள்ளுபடி செய்த எடப்பாடியார்!

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் 2016ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்திருந்த நிலையில் இன்றைய அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
    கொரோனா உச்சம்

    கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தபோது, தமிழக மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.. அப்போது ஒருமுறை செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள், "கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை அரசு தள்ளுபடி செய்யுமா" என்று கேட்டிருந்தனர். அதற்கு அமைச்சர், வாய்ப்பே கிடையாது என்று திடமாக சொல்லி இருந்தார்.

    "வேலுச்சாமி போன் பண்ணினார்.. நானும் என்னப்பான்னு கேட்டேன்".. நொந்து போய் ட்வீட் போட்ட ராமதாஸ்!

    செல்லூர் ராஜு

    செல்லூர் ராஜு

    செல்லூர் ராஜு இப்படி சொல்லி, ஒருசில மாதங்கள்தான் ஆகியிருக்கும்.. ஆனால், அதற்குள் அஸ்திரங்களை அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கி மும்முரம் காட்ட ஆரம்பித்தது... விவசாயிகள் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அக்கறையையும் அதீதமாக எடுத்தது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    அதன்விளைவுதான், 16.43 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்... முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை சொன்னதுமே, மொத்த அமைச்சர்களும் மேசையை தட்டியும், கைகளை தட்டியும் ஆரவாரம் செய்தனர்.. தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறே இருந்தனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இன்று அனைத்து மீடியாவிலும் எடப்பாடியாரே காட்சி தருகிறார்.. எடப்பாடியாரே நிறைந்திருக்கிறார்.. ட்விட்டர் பக்கம் போனாலே எடப்பாடியார்தான் அங்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார்.. முக்கால்வாசி விவசாயி கெட்டப்பில் கையில் கலப்பையுடனும், டிராக்டருடனும் காட்சி தருகிறார்.. #மண்ணின்_மைந்தன் #DalitLivesMatter விவசாயிகளின் தோழன், தமிழகத்தின் தங்க மகனே என்ற வாசகங்கள் பளிச்சிடுகின்றன.

    திமுக

    திமுக

    அதுமட்டுமல்ல, "ஆட்சிக்கு வந்துதான் நீட் ஒழிப்பீர்கள் என்றால், தற்போது புதுச்சேரியில் உங்கள் கூட்டணி அரசுதானே நீடிக்கிறது? ஏன் இன்னும் நீட்டை ஒழிக்கவில்லை என்று அன்று சட்டப்பேரவையில் திமுகவை கேட்ட கேள்வியையும் ட்விட்டர்வாசிகள் நறுக்கென பதிவிட்டு வருகின்றனர். சாதனைகள் புரிந்து - சரித்திரங்கள் படைத்த தமிழகத்தின் நம்பிக்கைVictory hand மாண்புமிகு முதல்வர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களை வேலூர் மாநகருக்கு வருக வருக என தலை வணங்கி வரவேற்கிறேன் என்று முதல்வருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

    ஹைலைட்

    ஹைலைட்

    இதைவிட இன்னொரு ஹைலைட் இருக்கிறது.. முதல்வரை வைத்து ஒரு டி-ஷர்ட்டே அறிமுகமாகிவிட்டதுபோலும்.. மண்ணின் மைந்தன் எடப்பாடி என்று அந்த டி-ஷர்ட்டில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.. ஒரே நாளில் இத்தனை அறிவிப்புகளை கேட்டு தமிழகமே திக்குமுக்காடி போயுள்ளது.. படிப்படியாக மெல்ல மெல்ல நடவடிக்கை எடுத்து அறிவிக்கப்படும் விஷயத்தை ஒரே நாளில் அறிவித்து எங்கோ உச்சியில் போய் அமர்ந்துவிட்டார் எடப்பாடியார்..!

    English summary
    CM Edapadi Palanisamys announcement of farm loan waiver scheme
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X