சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளத்தால் தனித் தீவான கடலூர் மாவட்டம்.. முதல்வர் நாளை நேரில் ஆய்வு

Google Oneindia Tamil News

சென்னை: மழை, வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பார்வையிட உள்ளார். கடலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலத்தில் மழை நீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

CM Edappadi Palaniswami will visit Cuddalore district on tomorrow

பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தனித் தீவுகளாக மாறி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை இந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

வளிமண்டல சுழற்சியால் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்: வானிலை மையம் வளிமண்டல சுழற்சியால் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்: வானிலை மையம்

ஏற்கனவே, அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உள்ளார், இப்போது முதல்வரும் வருகை தருகிறார்.

CM Edappadi Palaniswami will visit Cuddalore district on tomorrow

கடலூர் மாவட்டத்தின், குறிஞ்சிப்பாடி, பரதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், அங்குள்ள மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

English summary
CM Edappadi Palaniswami will visit Cuddalore district on tomorrow, to oversee the rain and flood affected areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X