சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் போட்ட கமிட்டி.. நூற்றாண்டு நாளில் தரமான சம்பவம் .. என்னென்ன நன்மை கிடைக்க போகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளில் சமூகநீதி கண்காணிப்புக் குழு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழு மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்போகிறது. எனவே இனிமேல் சமூக நிதி பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் உறுதியாகி உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்" *திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட - தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக் கொண்டது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த வரலாறு இன்று நேற்றல்ல; நூற்றாண்டுத் தொடர்ச்சியைக் கொண்டது ஆகும்.

1916-ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தது. 1920-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனை பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது.

 மகப்பேறு விடுப்பு கொடுப்பதில்... எந்த பாரபட்சமும் இல்லை... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி..! மகப்பேறு விடுப்பு கொடுப்பதில்... எந்த பாரபட்சமும் இல்லை... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி..!

சமூகநீதி

சமூகநீதி

1916-ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தது. 1920-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனை பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது.

 சமூகநீதி வரலாறு

சமூகநீதி வரலாறு

அதில் மிக மிக முக்கியமான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது. அதுதான் தமிழ்ச் சமுதாயத்தின் பல தலைமுறைகளை மாற்றிய சமூகநீதி அரசாணை ஆகும். 16.9.1921-ஆம் நாள் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சரான பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசுப்பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால், அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்" என்ற அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது. இதுதான் சமூகநீதிக்கான அடித்தளம் ஆகும். அதிலிருந்துதான் சமூகநீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது.

எஸ்.முத்தையா

எஸ்.முத்தையா

நூறு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 16-ஆம் நாளான இன்று வெள்ளுடை வேந்தர் தியாகராயர். சமுதாய சீர்திருத்த மருத்துவர்களான நடேசனார். டி.எம்.நாயர், கடலூர் ஏ.சுப்பராயலு, பளகல் அரசர், அமைச்சர் எஸ்.முத்தையா, பி.டி.இராஜன் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் அன்று தொடங்கி வைத்த சமூகநீதிப் புரட்சிதான் தமிழ்ச்சமுதாயத்தின் இலட்சக்கணக்கானவர்கள் இல்லங்களில் விளக்கேற்றக் காரணமாக அமைந்தது. இந்த உத்தரவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தரவரிசைப் பட்டியலைப் போட்டுக் கொடுத்தார் அன்றைய அமைச்சர் எஸ்.முத்தையா அவர்கள். அதனால் தான், 'இனிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள் என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

திமுக அதிரடி

திமுக அதிரடி

இந்த சமூகநீதி அரசாணையானது தமிழ்நாடு எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இத்தகைய அகில இந்தியப் புரட்சிக்குக் காரணமான அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறேன். திராவிட முன்னேற்றக் கழக அரசானது, இத்தகைய சமூகநீதிப்பயணத்தின் அடுத்தகட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது.

என்ன அளவுகோல்

என்ன அளவுகோல்

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும். வழிகாட்டும்; செயல்படுத்தும் சரியாக நடைமுறைப்படுத்த படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரித்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். சமூகத்தி அரசாணையின் நூற்றாண்டு) நாளில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன். எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம்" இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

யாருக்கு நன்மை

யாருக்கு நன்மை

முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி சமூகநீதி இனி நிலைநாட்டப்படுவது உறுதியாகி உள்ளது.. எப்படி என்றால், கல்வியில் இடஒதுக்கீடு ஒவ்வொரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா, இல்லை என்றால் ஏன் இல்லை? அதன்பிறகு உரிய நடவடிக்கை பாயபோகிறது. இதேபோல் தான் அரசு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு குறிப்பிட்ட சமூகத்திற்கு சரியாக கிடைத்ததா என்பதை கண்காணிப்பு குழு இனி கண்காணிக்கும். பதவி உயர்வு, நியமனங்களிலும் சமூக நீதி நிலைநாட்டப்பட உள்ளது. உண்மையிலேயே சமூக நீதியை வெறும் பேச்சாக இல்லாமல் செயல் அளவில் எடுத்து சென்றதுடன்இப்போது அதை கண்காணிக்கவும் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்திருப்பது பாராட்டை பெற்றுள்ளது.

English summary
"I am proud to set up the Social Justice Monitoring Committee on the centenary of the Social Justice Government," said Tamil Nadu Chief Minister MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X