கையெழுத்துப் போட்ட ஸ்டாலின்! இனி அக்கவுண்டுக்கே வரும் ரூ.2000! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பு பயிலும் 75 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கவும், விடுதியில் தங்கிப் பயிலும் 45 மாணவர்களுக்கு உணவு வழங்கிட மொத்தம் ரூ.26.10 இலட்சம் அனுமதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில், மாணவர்கள், பெண்கள் ஆகியோரது முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கும் மாதம் 2000 ரூபாய் நிதி வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.

முக ஸ்டாலின்
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயிர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களுக்கு உணவு தங்கும் இடத்துடன் இலவச பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் நிதி வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் 2025-2026 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அவர்கள், "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ. 2000/- வீதம் வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 18 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். விடுதியில் தங்கிப்பயிலும் 45 மாணவர்களுக்கு 2025 -2026 கல்வியாண்டு முதல் உணவு வழங்க ஏதுவாக ரூபாய் 12 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.' என்னும் அறிவிப்பை வெளியிட்டார்.
கல்வி உதவித்தொகை
அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை மாணவர்களுக்குத் தேர்வின் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம். நான்காம். மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில், பயிலும் மாணவர்களுள் ஆண்டுக்கு 15 மாணவர்கள் என 75 மாணவர்களுக்கு மாதம் ரூ.2000/- வீதம் 12 மாதங்களுக்கு ரூபாய் 18 இலட்சம், விடுதியில் தங்கிப்பயிலும் 45 மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு 1 மாதத்திற்கு ரூ.67,500/- வீதம் தொடர் செலவினமாக ஓராண்டுக்கு ரூபாய் 8 இலட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 26 இலட்சத்து 10 ஆயிரம் அனுமதித்து ஆணையிட்டுள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இதற்குரிய அரசாணை 12.9.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம், முதுகலை. மற்றும் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டய வகுப்பில் பயிலும் மாணவர்கள் தமிழ் உயர்கல்வி தொடர்ந்து பயில்வதில் தொய்வுநிலை ஏற்படாமலிருக்க, இம்மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இவர்களுக்குத் மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதுபோல், இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
மாணவர் நல உதவி
இவை மட்டுமின்றி நிறுவன விடுதியில் தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு எந்தவொரு கட்டணமும் இல்லாமல் உணவு வசதி ஏற்படுத்தித் தருவது, தமிழ் உயர்கல்வி பயிலும் ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது நிறுவன மாணவர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. கல்வி உதவித் தொகையும், விடுதி மாணவர்களுக்கு உணவும் வழங்கிட ஆணை பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்ளுக்கு மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்." என கூறப்பட்டுள்ளது.
-
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications