நிறைவேறிய நீண்டகால எதிர்பார்ப்பு- சென்னை வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்கள் திறப்பு!
சென்னை: சென்னை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளான கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம் இந்த பகுதிகளில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே 100 அடி சாலையில் 1 கி.மீ தொலைவுக்கு 2015-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. ரூ93 கோடி மதிப்பிலான இந்த பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டது.

கோயம்பேடு மேம்பாலம்
ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் முடிவடையாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு கொரோனா கால லாக்டவுனும் மேம்பால பணிகளில் தொய்வை ஏற்படுத்தியது. தற்போது இந்த மேம்பால பணிகள் முழுமையடைந்துவிட்டன. கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா முதல் தேமுதிக தலைமை அலுவலகம் வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

வேளச்சேரி 2 அடுக்கு மேம்பாலம்
இதேபோல் வேளச்சேரி விஜயநகர் சந்திப்பிலும் 2 அடுக்கு மேம்பாலம் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. தரமணி லிங்க் ரோடு மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த 2 அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இதன் பணிகளும் தற்போது முடிவடைந்துள்ளன.

மேம்பாலங்கள் இன்று திறப்பு
இந்த 2 மேம்பாலங்களையும் இன்று காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் கோயம்பேடு 100 அடி சாலை மற்றும் வேளச்சேரி விஜய நகர் பகுதிகளில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இந்த 2 மேம்பாலங்களும் பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு.

முதல் முறையாக வேலூர் பயணம்
கோயம்பேடு மேம்பால திறப்பு நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் மாலை 4 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் செல்கிறார். தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் வேலூர் மாவட்டத்துக்கு முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் செல்வதால் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications