200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
சென்னை: பழம்பெருமை வாய்ந்த ஆனைப்புலி பெருக்கமரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் உள்ளது.
Recommended Video
பழம் பெருமை வாய்ந்த இந்த மரம் இந்த மருத்துவமனைக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் புராதான சின்னமாக விளங்குகிறது.

ஆனைப்புலி பெருக்கமரம்
இத்தகைய பெருமை வாய்ந்த ஆனைப்புலி பெருக்கமரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். மேலும், ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனைப்புலி பெருக்க மரத்தின் சிறப்புகள் இந்த கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. முதல்வர் குறிப்பேடு திறந்து வைக்கும் அளவுக்கு இந்த ஆனைப்புலி பெருக்க மரம் என்ன சிறப்புகளை பெற்றுள்ளது என்பது பற்றி காண்போம்.

சிறப்புகள் என்ன?
உலகின் பழமையான மரங்களில் ஒன்றான ஆனைப்புலி பெருக்க மரம் ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்ததாகும். இந்த மரம் சுமார் 500 ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடியது. நீரை தன்னகத்தே தேக்கி வைக்க கூடிய சிறப்பு அம்சம் ஆனைப்புலி பெருக்க மரத்துக்கு உண்டு. மிகவும் தூய்மையான காற்றை தரக்கூடிய இந்த மரம் இந்தியாவில் 6 இடங்களில் மட்டுமே இருக்கிறது. 37 அடி சுற்றளவு கொண்ட ஆனைப்புலி பெருக்க மரம், தமிழகத்தில் அதுவும், இந்தியாவிலேயே பழமை வாய்ந்த மருத்துவமனையில் இருப்பது மிகச்சிறப்பான ஒன்றாகும்.

மக்களுக்கான திட்டம்
இதனை தொடர்ந்து ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் மக்களை தேடி மருத்துவம் மையத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- தமிழகத்தில் தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தலைவர் கலைஞர் ஒவ்வொரு பிறந்தநாளையும் தனக்காக கொண்டாடாமல் மக்களுக்கான திட்டங்களை செய்லபடுத்துவார்.

அறுவை சிகிச்சை
தலைவர் வழியைத்தான் இப்போது நாம் பின்பற்றி வருகிறோம். அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் 4000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications