சார் உரிமைத்தொகை வரலை..ஸ்டாலின் காரை மறித்து கேட்ட 2 பெண்கள்! உடனே பறந்த உத்தரவு! அடுத்த சுவாரசியம்
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உரிமைத்தொகை கேட்டு கோரிக்கை வைத்த பெண்களுக்கு உடனே உரிமைத்தொகை கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி மகளிர் உரிமை தொகையின் முதல் தவணை வழங்கப்பட்டது. மொத்தம் 1.70 கோடி பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் கொடுத்து இருந்தனர்.

அதன்பின் 1.06 கோடி பேருக்கு இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பணம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு 1.06 கோடி பேரின் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு பணம் அனுப்புவது தொடர்பாக உறுதி மெசேஜ் அனுப்பப்பட்டது.
கடந்த மாதம் இவர்களுக்கு பணம் அனுப்பப்பட்ட நிலையில் இந்த மாதம் வரும் 1ம் தேதி அல்லது 5ம் தேதி இந்த பணம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் இந்த திட்டத்தின் கீழ் தங்களுக்கு பணம் வரவில்லை என்று சிலர் புகார் வைத்து வருகின்றனர்.
நாங்கள் விண்ணப்பம் கொடுத்தோம். முக்கியமாக இந்த திட்டத்திற்கு தகுதியான எல்லா ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. அப்படி இருந்தும் கூட எங்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்று புகார்கள் வைத்து வருகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக இவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை.
விண்ணப்பம்: இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்ய, பணம் வராதவர்கள் மீண்டும் முறையீடு செய்ய, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பம் செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதுவரை ரூ.1,000 கிடைக்கப் பெறாதவர்கள் www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம்;. குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் புதிய விண்ணப்பங்களையும் இதில் மேற்கொள்ள முடியும்.
கோரிக்கை: இந்த நிலையில்தான் ஸ்ரீபெரும்புதூரில் உரிமைத்தொகை கேட்டு கோரிக்கை வைத்த பெண்களுக்கு உடனே உரிமைத்தொகை கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டது கவனம் பெற்றுள்ளது.
அதன்படி காரில் சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவுடன் பெண்கள் சந்தித்துள்ளனர். 2 பெண்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உரிமை தொகை எங்களுக்கு வரவில்லை சார் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை கேட்டதும் அருகே இருந்த எம்எல்ஏவை பார்த்து முதல்வர் ஸ்டாலின்.. உங்க தொகுதி தானே இது? அமைச்சர் கிட்ட சொல்லி.. உடனே இவங்களுக்கு ரூ.1000 கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லுங்கள். உடனே 1000 ரூ உரிமை தொகையை இவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய சொல்லுங்கள். இன்னும் வரவில்லையாம். உடனே அமைச்சர்கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதையடுத்து அந்த நிர்வாகி.. இது காங்கிரஸ் தொகுதி சார். நான் பார்த்துக்கொள்கிறேன். இவர்களின் போன் நம்பரை வாங்கி நாளை காலையே பணிகளை செய்துவிடுகிறேன். நாளை காலையே அவர்களுக்கு பணம் அனுப்ப நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications