சீட்டு கட்டை.. கலைத்து ஆடும் திமுக.. சட்டசபை தேர்தலுக்காக இப்பவே பயங்கர முடிவு.. துணிச்சல்தான்
சென்னை: சட்டமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்துவதற்காக இரு தொகுதிகளுக்கு ஒரு மா.செ. எனும் திட்டத்தை அமல்படுத்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இதற்கு சீனியர் மா.செ.க்கள் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை.
அதேபோல, கட்சியின் ஒன்றிய அமைப்புகளையும் உடைத்து திமுக ஒன்றியங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவும் திட்டமிடப்பட்டது. இதற்கும் மா.செ.க்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. அதனால், திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கிறதாம் அறிவாலயம்.

இந்த நிலையில், தமிழகத்தை 7 மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு செயலாளரை (ம.செ.) நியமிக்க முடிவு செய்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். சென்னை மற்றும் அதன் புற நகர் மாவட்டங்களுக்கு ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளாராம். இந்த மண்டல செயலாளர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது என்கின்றனர் உடன்பிறப்புகள்.
உதயநிதி பிளான்
திமுகவின் மா.செ.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதில் இளைஞர் அணி நிர்வாகிகளை நியமிக்க உதயநிதி முயற்சித்து வருகிறார். குறிப்பாக 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என்பது உதயநிதியின் திட்டம். இதற்கான முயற்சியைத்தான் கடந்த பல மாதங்களாகவே எடுத்து வருகிறார்.
ஆனால், சீனியர் அமைச்சர்களின் அதிருப்தியாலும் எதிர்ப்பாலும் இந்த முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. திமுகவிலும் மண்டலத் தலைவர் என்கிற கான்செப்ட்டை கொண்டுவரலாமா? என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. மண்டல தலைவரா? மண்டல செயலாளரா? அல்லது மு.க. அழகிரிக்கு கொடுக்கப்பட்டது போல தென்மண்டல் அமைப்பு செயலாளர் மாதிரி மண்டல அமைப்புச் செயலாளரா? என எதனை உருவாக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் 2 தொகுதிக்கு ஒரு மா.செ. எனும் திட்டத்தை எதிர்க்கும் சீனியர்களை மண்டலத்துக்கு தலைமை ஏற்கும் வகையில் நியமித்து அவர்களின் அதிருப்தியை சரிகட்டிவிட முடியும் என்று தலைமை யோசித்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
தேர்தல் ரெடி
2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது
திமுக தேர்தலுக்கு தயார் ஆனாலும்.. அதிமுகவில் இன்னும் மாவட்ட செயலாளர் பிரச்சனைகள் தீரவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவில் யாரையும் எடப்பாடியால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் மீது மாவட்ட செயலாளர்களுக்கு பயம் இல்லை. ஜெயலலிதா காலத்தில் அவர் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்.
ஆனால் எடப்பாடி அப்படி இல்லை. மாவட்ட செயலாளர்கள் யாரும் எடப்பாடி மீது அச்சம் இல்லை. சிலரை தூக்கினால் சிக்கல் ஆகிவிடும் என்று எடப்பாடியும் பயப்படுகிறார். சாதாரண கிளை செயலாளரை கூட எடப்பாடியால் தூக்க முடியாது. அப்படி தூக்கினால் சிக்கல் ஆகும்.
இப்படி இருந்து கொண்டு எடப்பாடி எப்படி தேர்தலை சந்திக்க முடியும். வலிமையாக இல்லாத ஒருவர் எப்படி தேர்தலை சந்திக்க முடியும். அவரால் யாரையும் தூக்க முடியாது. தூக்கினால் கட்சிக்கு ஆபத்து. அவருக்கும் ஆபத்து என்பது அவருக்கு தெரியும்.
அதிமுகவில் உள்ள பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லை. அரசுக்கு எதிரான மனநிலை இருந்தும் கூட பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் இல்லை. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தென் மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக புகார் வைத்துள்ளார். திருச்சியில் உள்ளவர்கள் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி உள்ளனர்.
என்னிடம் ஆதாரம் உள்ளது. நீங்கள் எப்படி செல்லலாம். நீங்கள் எப்படி திமுகவினர் உடன் தொடர்பில் இருக்கலாம் என்று கேட்டு உள்ளனர். அதிலும் ஒரு மாவட்ட செயலாளரை பார்த்து நீங்கள் திமுக அமைச்சர் ஒருவருடன் அடிக்கடி தொடர்பில் இருப்பதாக கூறி உள்ளார். அவர் சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர்.
எடப்பாடி கேட்டதற்கு அந்த மாவட்ட செயலாளர் கோபம் அடைந்து உள்ளார். நீங்கள் அடிக்கடி திமுகவினரை சந்திக்கிறீர்கள் .. எனக்கு புகார் வருது என்றுள்ளார். அதற்கு அந்த மாவட்ட செயலாளர்.. அண்ணே அது பிஸ்னஸ் அண்ணே.. அதை விட்டுவிடுங்கள்.. நீங்கள் கட்சிக்கு என்ன செய்ய சொல்கிறீர்களோ செய்கிறேன்.. செலவு வேண்டுமா செய்கிறேன்.. என்று கூறி உள்ளார் என்கின்றன அதிமுக வட்டார தகவல்கள்.












Click it and Unblock the Notifications