Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1,000 மாடல் பள்ளிகள், 7 லட்சம் வீடுகள், தொழில்பூங்கா! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அம்ச அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்து வரும் தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் 14 முக்கிய அம்சங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டுக்குள் 7 லட்சம் வீடுகள் கலைஞர் இல்ல திட்டத்தின் கீழ் கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ள ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மாடல் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த 5 ஆண்டுகளில் துறை வாரியாக திமுக செய்த சாதனைகள் டேட்டாவுடன் விளக்கப்பட்டன. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 2030ஆம் ஆண்டுக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

CM Stalin

முதல்வர் ஸ்டாலினின் 14 அம்ச அறிவிப்புகள்

தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. அதேபோல் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

1,000 மாடல் பள்ளிகள்

தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும் என்றும், மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகாளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உணவுப்பொருள் உற்பத்தி உயர்த்தப்படும் என்றும், தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 100 சதவிகிதம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் மாடல் பள்ளிகள் உருவாக்கப்படும்.

நான் முதல்வன் திட்டம் 2.0

அதேபோல் நான் முதல்வன் திட்டம் 2.0 மூலமாக மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்படும். உலகளவில் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டி போடும் அளவிற்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் செய?ற்கை ஏஐ ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஜவுளி, ஆடை, தோல் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் உறுதிபடுத்தப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வீட்டுமனைப் பட்டா

அதேபோல் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். அதேபோல் சிறுபான்மை சமூகத்தினர் தொழில் தொடங்க கடன் வசதிகள் எளிமைப்படுத்தப்படும். அதேபோல் தேவைப்படும் இடங்களில் சமூகநீதி விடுதிகள் அமைக்கப்படும். வீட்டுமனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பங்களுக்கும் 2030க்குள் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். அதேபோல் உண்டு உறைவிட பள்ளிகள் விரிவாக்கம் செய்யப்படும்.

ஐடி ஏற்றுமதி

அதுமட்டுமல்லாமல் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல் கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவோம். நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளுடன் கிராமங்களும் வளர்த்தெடுக்கப்படும். அதற்காக முதல் கட்டமாக 10 ஊராட்சிகளில் உத்தமர் காந்தி மாதிரி கிராம திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்ததாக 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எங்களின் இலக்காக நிர்ணயித்துள்ளோம். ஐடி ஏற்றுமதி ரூ.6 லட்சம் கோடியாக 2 மடங்கு உயர்த்தப்படும்.

மாவட்டந்தோறும் நவீன் தொழில் பூங்கா

அதேபோல் மாவட்டந்தோறும் நவீன தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். மறுபக்கம் கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தை விரிவுபடுத்துவோம். புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும் என்றும், மீன் உற்பத்தியை 200 டன்னில் இருந்து 400 டன்னாக உயர்த்துவோம் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும். 2030ஆம் ஆண்டுகுள் கால்நடைகளின் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்துவோம்.

புதிய கலாச்சார மையங்கள்

அதேபோல் அனைத்து மாநகராட்சியிலும் புதிய கலாச்சார மையங்கள் அமைக்கப்படும். அதேபோல் மாநகராட்சி, நகராட்சிகளில் முழுமையான மழைநீர் வடிகால் அமைப்பு உருவாக்கப்படும். அதுமட்டுமல்லாமல் 2030க்குள் தினமும் 4.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி என்ற இலக்கோடு செயல்படுவோம். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பன்னாட்டு கண்காட்சி நடத்தப்படும். கோயில் நகரங்கள், கடலோர சுற்றுலா தளங்களுக்கு செல்லக் கூடிய சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+