Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் கையில் சிக்கிய ஆடு! இனி நம்பிக்கை வைக்க கூடாது.. தூக்கி அடிக்கப்படும் "அந்த" ஐஏஎஸ் அதிகாரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தமிழ்நாடு அரசை நிலைகுலைய வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடும் அப்செட்டில் உள்ள முதல்வர் ஸ்டாலின்.. முக்கியமான ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தூக்க உள்ளாராம்.

கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

kallakurichi mk stalin illicit liquor

அதிர்ச்சி அளித்த மரணம்: கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 50 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்டாலின் சுதாரிக்கலாம்: முன்னதாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கடந்த 2022-ல் ஏற்பட்ட கலவரம் திமுக அரசின் நிர்வாகத்துக்கு எதிராக விமர்சனங்களை கொடுத்தது. உண்மைத் தகவல்களை அரசில் உள்ளவர்களும், அதிகாரிகளும் மூடி மறைத்ததாக அப்போது குற்றச் சாட்டுகள் எதிரொலித்தன.

அந்த சமயத்தில் அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நம்பவில்லை. ஆனால், தற்போது கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமான பல சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டதாக ஸ்டாலினுக்கு கிடைக்கும் தகவல்களை அவர் நம்பத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு தகவல்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தமிழ்நாடு அரசை நிலைகுலைய வைத்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் சென்றுள்ளதாம்.

அதன்படி, மாவட்ட கலெக்டருக்கு கீழுள்ள வருவாய்த் துறை அதிகாரிகளான தாசில்தார், ஆர்.ஐ., வி.இ.ஓ. உள்ளிட்டவர்களும் இந்த கள்ளசாராயம் தடையின்றி காய்ச்சவும், சப்ளை ஆவதிலும் உடந்தையாக இருந்துள்ளனர்.

மாதா மாதம் கப்பம் செலுத்தபட்டு வந்திருக்கிறது. கள்ளசாராயம் அமோகமாக விற்பனை யாவதற்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை ? என்றும், மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்யும் நிர்வாகம், மாவட்ட கலெக்டரை மட்டும் சஸ்பெண்ட் செய்யாமல் இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்? கலெக்டரான ஐ.ஏ.எஸ். அதிகாரியை, கோட்டையில் உள்ள அரசு செக்ரட்டரிகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொழில் ரீதியாக காப்பாற்றுகிறார்களா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

நீக்கம்: இந்த விவகாரம் தொடர்பாக கடும் அப்செட்டில் உள்ள முதல்வர் ஸ்டாலின்.. முக்கியமான ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தூக்க உள்ளாராம். மூக்கையா பொறுப்பை கையில் வைத்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரியை ஸ்டாலின் தூக்க உள்ளாராம்.

முதன்முறையாக அமைச்சர்கள், அதிகாரிகள் இரு தரப்பின் மீது கோபம் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று தெரிவிக்கின்றனர் அமைச்சர்களுக்கு நெருக்கமான உடன் பிறப்புகள். இது பற்றி அமைச்சர்களிடம் சரமாரி கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளாராம். தலைமை செயலகத்தில் நடந்த மீட்டிங்கில் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.

கடிந்து கொண்ட ஸ்டாலின்; அமைச்சர்கள் துரைமுருகன், எவ வேலு, உதயநிதி, மா.சு, மற்றும் தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டவர்களோடு அவசர ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். சம்பவம் எப்படி நடந்தது என்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் விரிவாக முதல்வருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

விரிவான விளக்கம்: குறிப்பாக, மாவட்ட சட்ட ஒழுங்கு பிரிவும், கலால் பிரிவும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களிடம் மாத மாமூல் வசூலித்து வந்த விபரங்களை பற்றியும் கூறியுள்ளனர். அதைக்கேட்டு, எ.வ வேலுவிடம் இது எப்படி உங்களுக்குத் தெரியாமல் நடந்தது ? என்று கடிந்து கொண்டுள்ளார் ஸ்டாலின். சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட அரசியல் தலைகள் சிலருக்கு கப்பம் கட்டப்பட்டு வந்துள்ளது.

இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருந்த அந்த ஐஏஎஸ் அதிகாரி மீது ஸ்டாலின் செம அப்செட்டில் இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+