Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்ஜே சூர்யா டூ சாய்பல்லவி - அனிருத் வரை.. 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கிய முதல்வர்.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதை 90 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். அதன்படி நடிகர் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத், பின்னனி பாடகி ஸ்வேதா மோகன் உள்பட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பல்வேறு கலைப் பிரிவுகளை சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு, கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயம், நாடக குழுவிற்கு சுழற்கேடயம் வழங்கப்படுகிறது.

cm-stalin-gives-kalaimamamni-award-to-90-artists-including-actor-sj-suryah-sai-pallavi-and-anirudh

அதன்படி, 2021, 2022 மற்றும் 2023ம்ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் முருகேச பாண்டியனுக்கு, பாரதியார் விருது; திரைப்பட பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது; நாட்டிய கலைஞர் முத்துகண்ணம்மாளுக்கு, பால சரஸ்வதி விருது அறிவிக்கப்பட்டது. : பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டது.

மேலும் சிறந்த கலை நிறுவனத்திற்கான விருது, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள, தமிழ் இசை சங்கத்திற்கும், சிறந்த நாடக குழுவிற்கான விருது, மதுரை மாவட்டம், பாலமேடு எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றத்திற்கும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து இன்று சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அதன்படி நடிகர் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத், பின்னனி பாடகி ஸ்வேதா மோகன் உள்பட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவர்கள் உள்பட கலைமாமணி உள்பட பிற பிரிவுகளில் விருது பெற்ற அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது என்பத 1. க. திருநாவுக்கரசு எழுத்தாளர்

2. கவிஞர் நெல்லை ஜெயந்தா இயற்றமிழ்க் கவிஞர்

3. எஸ். சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் சமயச் சொற்பொழிவாளர்

4. பாபநாசம் அசோக் ரமணி குரலிசை

5. பா. சற்குருநாதன் ஓதுவார் திருமுறைதேவாரஇசை

6. டி. ஏ. எஸ். தக்கேசி தமிழிசைப் பாடகர்

7. திருச்சூர் சி. நரேந்திரன் மிருதங்கம்

8. என். நரசிம்மன் கோட்டு வாத்தியம்

9. கோ. பில்லப்பன் நாதசுர ஆசிரியர்

10. திருக்காட்டுப்பள்ளி டி. ஜே. சுப்பிரமணியன் நாதசுரம்

11. கல்யாணபுரம் ஜி. சீனிவாசன் நாதசுரம்

12. திருவல்லிக்கேணி கே. சேகர் தவில்

13. நாட்டியம் வழுவூர் எஸ். பழனியப்பன் பரதநாட்டிய ஆசிரியர்

14. பிரியா கார்த்திகேயன் பரதநாட்டியம்

15. நாடகம் பூச்சி எஸ். முருகன் நாடக நடிகர்

16. காரைக்குடி நாராயணன் நாடக இயக்குநர்

17. என். ஏ. அலெக்ஸ் ஆர்மோனியம்

18. திரைப்படம் எஸ். ஜே. சூர்யா திரைப்பட நடிகர்

19. சாய் பல்லவி திரைப்பட நடிகை

20. லிங்குசாமி திரைப்பட இயக்குநர்

21. ஜே. கே. (எ) எம். ஜெயகுமார் திரைப்பட அரங்க அமைப்பாளர்

22. சூப்பர் சுப்பராயன் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்

23. சின்னத்திரை பி. கே. கமலேஷ் சின்னத்திரை நடிகர்

24. இசை நாடகம் எம். பி. விசுவநாதன் இசை நாடக நடிகர்

25. கிராமியக் கலைகள் வீர சங்கர் கிராமியப் பாடகர்

26. நா. காமாட்சி பொய்க்கால் குதிரை ஆட்டம்

27. எம். முனுசாமி பெரியமேளம்

28. பி. மருங்கன் நையாண்டிமேள நாதஸ்வரம்

29. கே. கே. சி. பாலு வள்ளி ஒயில்கும்மி

30. இதர கலைப் பிரிவுகள் வே. ஜீவானந்தன் ஓவியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அதன்பிறகு 2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 1. இயல் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுத்தாளர்

2. முனைவர் தி. மு. அப்துல்காதர் இலக்கியப் பேச்சாளர்

3. சு. முத்துகணேசன் சமயச் சொற்பொழிவாளர்

4. இசை ஜெயஸ்ரீ வைத்தியநாதன் குரலிசை

5. சாரதா ராகவ் குரலிசை

6. பகலா ராமதாஸ் வயலின்

7. நெய்வேலி ஆர். நாராயணன் மிருதங்கம்

8. செம்பனார்கோயில் எஸ். ஜி. ஆர். எஸ். மோகன்தாஸ் நாதசுரம்

9. சித்துக்காடு டி. ஜி. முருகவேல் நாதசுரம்

10. திருக்கடையூர் டி. ஜி. பாபு தவில்

11. சுசித்ரா பாலசுப்பிரமணியன் கதா காலட்சேபம்

12. நாட்டியம் அமுதா தண்டபாணி பரதநாட்டிய ஆசிரியர்

13. வி. சுப்பிரமணிய பாகவதர் பாகவத மேளா

14. சுவாமிமலை கே. சுரேஷ் பரதநாட்டியக் குரலிசை

15. நாடகம் பொன் சுந்தரேசன் நாடக நடிகர்

16. கவிஞர் இரா. நன்மாறன் நாடக இயக்குநர்

17. சோலை ராஜேந்திரன் நாடகத் தயாரிப்பாளர்

18. திரைப்படம் விக்ரம் பிரபு திரைப்பட நடிகர்

19. ஜெயா வி. சி. குகநாதன் திரைப்பட நடிகை

20. விவேகா திரைப்பட பாடலாசிரியர்

21. டைமண்ட் பாபு திரைப்பட செய்தித் தொடர்பாளர்

22. டி. லட்சுமிகாந்தன் திரைப்பட புகைப்படக் கலைஞர்

23. சின்னத்திரை மெட்டிஒலி காயத்ரி சின்னத்திரை நடிகை

24. இசை நாடகம் என். சத்தியராஜ் இசை நாடக நடிகர்

25. கிராமியக் கலைகள் ந. ரஞ்சிதவேல் பொம்மு தேவராட்டம்

26. மு. கலைவாணன் பொம்மலாட்டம்

27. எம். எஸ். சி. ராதாரவி தப்பாட்டம்

28. கே. பாலு நையாண்டிமேள நாதஸ்வரம்

29. இதர கலைப் பிரிவுகள் ஆர். சாமிநாதன் பண்பாட்டுக் கலை பரப்புனர்

30. கே. லோகநாதன் ஓவியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது என்பது 1. இயல் கவிஞர் கே. ஜீவபாரதி இயற்றமிழ்க் கவிஞர்

2. இசை ஆர். காசியப் மகேஷ் குரலிசை

3. ஹேமலதாமணி வீணை

4. வே. பிரபு கிளாரினெட்

5. பி. பி. ரவிச்சந்திரன் நாதசுரம்

6. ஞான நடராஜன் நாதசுரம்

7. எம். எஸ். ஆர். பரமேஸ்வரன் நாதசுரம்

8. ராமஜெயம் பாரதி தவில்

9. பா. ராதாகிருஷ்ணன் தவில்

10. நாட்டியம் க. தனசுந்தரி பரதநாட்டிய ஆசிரியர்

11. வி. ஜெயப்பிரியா குச்சுப்பிடி நாட்டியம்

12. கே. ஹரிபிரசாத் பரதநாட்டியக் குரலிசை

13. நாடகம் திரு. என். ஜோதிகண்ணன் பழம்பெரும் நாடக நடிகர்

14. வானதிகதிர் (எ) பெ. கதிர்வேல் நாடக நடிகர்

15. வி. கே. தேவநாதன் விழிப்புணர்வு நாடக நடிகர்

16. திரைப்படம் கே. மணிகண்டன் திரைப்பட நடிகர்

17. எம். ஜார்ஜ் மரியான் திரைப்பட குணச்சித்திர நடிகர்

18. அனிருத் திரைப்பட இசையமைப்பாளர்

19. ஸ்வேதா மோகன் திரைப்பட பின்னணிப் பாடகி

20. சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார் திரைப்பட நடன இயக்குநர்

21. நிகில் முருகன் திரைப்பட செய்தித் தொடர்பாளர்

22. சின்னத்திரை என். பி. உமாசங்கர்பாபு சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

23. அழகன் தமிழ்மணி சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்

24. இசை நாடகம் ஏ. ஆர். ஏ. கண்ணன் இசை நாடக நடிகர்

25. ஆர். எம். தமிழ்ச்செல்வி இசை நாடக நடிகை

26. கிராமியக் கே. எம். ராமநாதன் தெருக்கூத்து

27. டி. ஜெகநாதன் வில்லுப்பாட்டு

28. கலைகள் சி. மகாமணி நையாண்டிமேள தவில்

29. ஆ. சந்திரபுஷ்பம் கிராமியப் பாடல் ஆய்வாளர்

30. இதர கலைப் பிரிவுகள் சு. தீனதயாளன் சிற்பி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+