பேசும்போதே உடைந்து அழுது.. கண்ணீர்விட்ட இஸ்லாமிய பெண்! முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்! என்ன நடந்தது?
சென்னை: காஞ்சிபுரத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபை கூட்ட நிகழ்ச்சியில் அவரிடம் இஸ்லாமிய பெண்மணி ஒருவர் உருக்கமான கோரிக்கையை வைத்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் விதி 110-ன்கீழ், முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேசினார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக அவர் அளித்த அறிக்கையில், குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. நாடுமுழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கிராச சபை கூட்டம் நடைபெற்றது.

மோடி கிராமசபை
காஷ்மீரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்கோடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே அவர் ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டார். இன்று காலை செங்கோடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பெண்கள் என்ன சொன்னார்கள்?
இந்த கூட்டத்தில் பெண்கள் பலர் முதல்வர் ஸ்டாலினிடம் தைரியமாக கேள்விகளை எழுப்பினர். தங்கள் குறைகளை முதல்வர் முன்னிலையில் பெண்கள் பலர் எடுத்து வைத்தனர். இதில் பேசிய இஸ்லாமிய பெண்மணி ஒருவர், என்னுடைய கணவர் 2020 அக்டோபர் 2ம் தேதி இறந்துவிட்டார். எனக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நான் விடோ.. இப்போது கஷ்டப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், உங்கள் கணவர் எப்படி இறந்தார் என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, கொரோனாதான் ஐயா.. மூன்று பிள்ளைங்க எனக்கு என்று கூறி அங்கேயே கண்ணீர்விட தொடங்கினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின்.. இல்லை இல்லை அழாதீங்க.. நீங்கள் மனு கொடுத்து இருக்கீங்களா என்று கேட்டார். அதற்கு மனு கொடுக்கவில்லை. இனிதான் ஆட்சியரை பார்த்து மனு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். உடனே முதல்வர் ஸ்டாலின்.. நீங்கள் மனு கொடுங்கள்.
Recommended Video

மனு கொடுங்கள்
நான் என்னவென்று பார்க்க சொல்கிறேன். கவலைப்பட வேண்டாம். கண்ணீர் விடாதீர்கள் என்று கூறினார். நீங்கள் என்னிடம் கொடுத்த மனுக்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கூறுவேன். நானே இதை நேரடியாக ஆய்வு செய்வேன். தேவைப்பட்டால் நேரில் வந்து நானே எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிப்பேன், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications