அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்.. வீடியோ கான்ஃபரன்சிங்கில் இணைந்த ஆ.ராசா! உஷார் மோடில் நீலகிரி!
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து வரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி சில பகுதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கோவையில் வால்பாறை, நீலகிரியில் குந்தா, கூடலூர், பந்தலூர், உதகை ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வரும் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இது லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும். குறிப்பாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பருவமழை பாதிப்புகள், நீலகிரி மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நீலகிரி எஸ்.பி சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர். மேலும், நீலகிரி எம்.பி ஆ.ராசாவும் பங்கேற்றார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர். எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மழை தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னறிவிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர்களுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் - நிவாரணப் பணிகள் குறித்த உத்தரவுகளைத் தொலைபேசி வாயிலாக வழங்கிக் கொண்டிருந்தேன்.
மழை தொடர்ந்து வரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தேன்." எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications