கனவுகள் நனவாகியது! மொத்தம் ரூ.8,801 கோடி.. திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ரூ.8,801.93 கோடி செலவில் திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.8,801.93 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்து உள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி அருகே, ஈவினிங் பஜார் சாலை மற்றும் ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கேயும் ரூ.9.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார்.

அத்துடன் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வளத்துறை சார்பில் ரூ.111.35 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள பாசன கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பில், கொள்ளிடம் ஆற்றில் ரூ.414 கோடி செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள நீரொழுங்கி; நீர்வளத்துறை சார்பில் செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.48 கோடி மதிப்பிலான 50 ஈப்புகளை வழங்கினார்.
வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.210.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்கள்; வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை சார்பில் ரூ.12.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கோட்டாசியர் குடியிருப்புகள், வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், கிராம நிருவாக அலுவலகம் மற்றும் குடியிருப்பு, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில், ரூ.7300.54 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்களை இன்று திறந்து வைத்தார் ஸ்டாலின்.
மேலும் ரூ.209.01 கோடி செலவில் 67 துணை மின் நிலையங்களில் 1089 எம்.வி.ஏ அளவிற்கு திறன் மேம்படுத்தப்பட்ட 69 மின் மாற்றிகளின் செயல்பாடு மற்றும் நாகப்பட்டினத்தில் ரூ.4.95 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடம், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ரூ.7.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம், தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு திருவுருவச் சிலை, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் குதிரையில் அமர்ந்து போர்புரிவது போன்று கம்பீர தோற்றத்துடன் கூடிய புதிய சிலையை திறந்து வைத்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப்புலத் துறையில் ரூ.7 லட்சத்து 12 ஆயிரம் செலவில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் மார்பளவு சிலை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.14.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ரூ.134.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.6.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மதுரை - அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.313. 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள், ரூ.29 கோடி செலவில் அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சமயநல்லூர், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையம் மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications