முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் "மக்களுடன் ஸ்டாலின்" செயலி.. என்ன சிறப்புகள்?
சென்னை: மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
தந்தை பெரியார் பிறந்த நாள், திமுகவை தொடங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15) , திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்த பிறகும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முப்பெரும் விழா வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துள்ளன.
அந்த பகுதியில் திமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் ரயில் மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காட்பாடி வந்தார். அவருக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நேற்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.
இன்று காலை 10.15 மணிக்கு வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
முப்பெரும் விழாவுக்காக வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த முப்பெரும் விழாவில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முதல்வரின் கள செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையிலும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அது போல் அரசு திட்டங்கள், ஒவ்வொரு தொகுதிகள் பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இந்த செயலியில் இருக்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications