ஜூலை 5 முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்... இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!
சென்னை: வரும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்புகள் குறையத் தொடங்கியிருப்பதால் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஓரளவு இயல்பு நிலை திரும்பிவிட்டது. இதனிடையே தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் திங்கள்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இதனால் புதிதாக தளர்வுகள் அளிப்பது குறித்தும் கொரோனா கட்டுப்பாடு பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாத 11 மாவட்டங்களிலும் பேருந்துகளை இயக்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே சுற்றுலாதலங்களான குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற இடங்களில் பொதுமக்கள் குவிவதை தடுக்கும் வகையில் அங்கு மட்டும் இ பாஸ் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications