ஆட்டத்தை தொடங்கிய திமுக! ஈகோ இல்லை! அனைத்து கட்சிகளுக்கும் போன ஸ்டாலின் லெட்டர்! பாஜகவிற்கு சிக்கல்
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மீண்டும் மொழிப்போர் உருவாவதற்கான சூழல் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக அரசியல் சூழல் தகிக்க தொடங்கி உள்ளது.
இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக, கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்திற்கும் இந்த கடிதம் அளிக்கப்பட உள்ளது. அதில், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கடிதம் எழுதிய ஸ்டாலின்
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!" என்று தெரிவித்திருக்கிறார்.
அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு நெருக்கடி
தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்தி திணிப்பு விவகாரத்தை எதிர்க்க முடியாமல் பாஜக திணறிக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த விவகாரம் பாஜகவிற்கு மேலும் நெருக்கடியாக மாறி உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், இந்தியாவின் கூட்டாட்சி முறையில், உரிமைகளை நிலைமூட்டுவதற்கும். தமிழ் மக்கள் நலன் காப்பதற்கும் தேவையான முயற்சிகளை நாம் ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறோம். இருப்பினும், நிதிப் பகிர்விலும், அதிகாரப் பதிலும் உரிமைகளைக் காப்பதற்குத் தொடர்ந்து போட வேண்டிய சூழ்நிலையிலே நாம் உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் 2008-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் கலை தொகுதிகள் ஒன்றிய அறம் மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ள சூழலில், நம் மாநிலம் சந்திக்க இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு தங்கள் கட்சி / இயக்கத்தின் ஆறாவைக் கோருவதற்காக இக்கடிதத்தை நான் தங்களுக்கு எழுதுகிறேன்.
நமது அரசியலமைப்பு சட்டத்தின் 62-வது பிரிவு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கு வகை செய்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்பகுதிகளின் அழுத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அரசியல்சட்டத் திருத்தங்களால் மட்டுமே இந்தகைய மறுசீரமைப்பு 2020-ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டிலும் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை, மாநிலங்கள் முனைப்போடு மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்த இலக்கை அடைவதில் அனைத்து மாநிலங்களின் செயற்பாடுகளும் ஒரே அளவில் இல்லை.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முழுவதுமாக ஈடுபட்டதால்தான், இது குறைந்துள்ளது. இத்தகைய முன்முயற்சிகள் தான் நாட்டின் மொத்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாடு வளர்ச்சி அடைவதற்கான முக்கிய காரணமாகவும் இருந்து வருகின்றன. எனவே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றி வரும் நமது மாநிலத்தை, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தண்டிக்க நினைப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல, என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications