"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்".. வடிவேல் காமெடி போல் ஆன அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
சென்னை: எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு மோடி எங்கள் டாடி என அதிமுகவினர் சரணாகதி அடைந்துவிட்டதை பார்க்கும் போது வடிவேலும் பார்த்திபனும் நடித்த "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தந்தை பெரியாரும் , அண்ணாவும் சந்தித்து கொண்ட இடம் திருப்பூர் தான் . கருணாநிதி அரசு தான் திருப்பூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது. அதே போல் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தையும் திமுக அரசு தான் உயர்த்தியது.
கடந்த நவம்பர் மாதம் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் , பல்வேறு முடிவுற்ற திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்தும் வைக்கப்பட்டன. மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது , அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவிப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

50 பேருக்கு கடிதம்
மாவட்ட வேறுபாடு அல்லாமல் , அனைத்து மக்களுக்கான அரசாக திமுக உள்ளது. அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கட்டமைப்பு அமைக்க திட்டமிட்டு 50 பேருக்கு கடிதம் எழுதினேன். 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அது தொடர்பான அடுத்த கட்ட பணிகள் இருக்கும். கூட்டாட்சி தத்துவத்திற்கு தற்போது ஆபத்து வந்துள்ளது.

3 வேளாண் சட்டம்
ஒரே நாடு ஒரே தேசம் என கட்டமைக்க முயல்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய சிறுபான்மையினரை கொச்சைப்படுத்தியது அதிமுக. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. முடியவே முடியாது என கூறிய பிரதமர் மோடியை , அறவழியில் போராடி வென்றார்கள் விவசாயிகள். நீட் என்ற பெயரில் , ஏழை மாணவர்கள் கல்வி பயிலுவதை தடுத்து நிறுத்தி , மாணவர்களின் கல்வி கனவை சிதைக்கிறார்கள்.

நீட் தேர்வு
நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னாடியே நீட் தேர்வை அமல்படுத்த நினைத்த போது ஜெயலலிதா அதை எதிர்த்து கடிதம் எழுதினார். ஆனால் நீட்டை அனுமதித்துவிட்டு இப்போது இல்லை என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நீட் தேர்வுக்கு பயிற்சி மையம் என்ற சொன்ன அவர்கள் , அது ரத்து தொடர்பாக எந்த அறிவிப்பையும் கொடுக்கவில்லை.

ஜெயலலிதா
எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா வை கூட மறந்துவிட்டு தற்போது மோடி எங்கள் டாடி என கூறி வருகின்றனர். இதையெல்லாம் பார்த்தால் ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவும் பார்த்திபனும்- "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்று நடித்த காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் காட்சி முடியும்போது வெறும் பலகைதான் இருக்கும். அது போல் அதிமுக வில் அண்ணாவை இழந்து , திராவிடத்தை இழந்து முன்னேற்றத்தை இழந்து, கழகத்தை பா.ஜ.க விடம் அடகு வைத்துவிட்டு உங்கள் கட்சி தொண்டர்களின் கோபத்துக்கும் ஆளாகி வெற்றுப் பலகையாக நிற்கிறீர்களே.
Recommended Video

மாநில சுயாட்சி
தற்போது ஒரே நாடு ஒரே பத்திரபதிவு என அறிவித்துள்ளனர். அதனால் தான் இந்தியா முழுமைக்கும் மத்தியில் கூட்டாட்சி , மாநில சுயாட்சி என்பதை கட்டமைக்க விரும்புகிறோம். திமுக ஆட்சியின் போது திருப்பூருக்கு பல்வேறு உதவிகள் வழங்கியுள்ளது. ஆனால் அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை என முதல்வர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின் போது விமர்சனம் செய்தார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications