திருவொற்றியூர் சாலை பெயர் மாற்றம்.. வள்ளலார் மாநாட்டில் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்!
சென்னை: சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு "வள்ளலார் நெடுஞ்சாலை" என பெயர் சூட்டினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெயர்ப்பலகையை காணொளிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு "வள்ளலார் நெடுஞ்சாலை" என புதிதாக பெயர் சூட்டி பெயர்ப்பலகையை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்
1. அனைத்துலக வள்ளலார் மாநாட்டின் நினைவாக காஞ்சி ஏகாம்பரநாதர் பள்ளியில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.
2. வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு, அப்பள்ளியில் திருவருட்பா இசை பயிற்சியும் அளிக்கப்படும்.
3. வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.
4. 'Spiritual Alchemy' என்ற வள்ளலாரின் புத்தகம் அறநிலையத்துறையின் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும்.
5. வள்ளலார் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும்.
6. மேட்டுக்குப்பம், மருதூர் மற்றும் கருங்குழி ஆகிய ஊர்களில் வள்ளலார் பெயரில் அன்னதான கூடங்கள் திறக்கப்படும்.
7. கடலூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் அமைய உள்ள பூங்காவிற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும். சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை வள்ளலார் நெடுஞ்சாலை என அழைக்கப்படும்.
8. சென்னையில் அறநிலையத்துறை வளாகத்தில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்.
ஸ்டாலின் பேச்சு
மேலும் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "அனைத்துலக வள்ளலார் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகள். நம் சேகர் பாபுவை பொறுத்தவரை கழகப்பணியிலும், அரசின் சார்பில் நடைபெறும் ஆன்மீகப் பணியிலும் சிறப்பாக ஈடுபட்டு, தான் 'செயல்' பாபு என்று நிரூபித்து வருகிறார்.
தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று சொல்லி உலகிற்கே 'தனிப்பெரும் கருணை' என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசும் ஏழை எளிய மக்களின் பசியை ஒழிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வள்ளலாரின் உயரிய கருத்துகளை, வாழ்வியல் நெறிகளை உலகெங்கும் போற்றிடும் வகையில் அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெறுகிறது. ரூ.8,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்டு சாதனை படைத்துள்ளோம். 864 கோயில்களில் ஒரு வேளை அன்னதான திட்டம் அமலில் உள்ளது. வள்ளலார் கோட்பாடுகளுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறோம்" எனப் பேசியுள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications