சுடச்சுட சாம்பார் சாதம்.. நிவாரண முகாமில் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை ருசித்து பார்த்தார்.
சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் திநகர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், புளியந்தோப்பு, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வடசென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் தங்குவதற்கும் உணவு சமைக்கவும் வழியில்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆற்றின் கரையோர மக்களும் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ள மக்களுக்கென சென்னையில் 100 -க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு உணவு
இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவை அரசே தயாரித்து வழங்குகிறது. சிங்கார சென்னையாக மாற்றுவதற்கான உத்திகளை கையாண்டு வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சென்னையை முதல்வர் ஸ்டாலின் இன்று 3ஆவது முறையாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

நிவாரண உதவிகள்
வடசென்னையில் புளியந்தோப்பு, பெரம்பூர், ஆட்டுத் தொட்டி, கொளத்தூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். சிவப்பு நிற ஜீப்பில் கருப்பு நிற ரெயின் கோர்ட் அணிந்து கொண்டு மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.

உணவு
இந்த நிலையில் நேற்றைய தினம் 2ஆவது நாளாக துறைமுகம், கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். இன்றைய தினம் போரூர், ஆர் கே நகர், கொளத்தூர் முகாம்களில் பார்வையிட்ட அவர் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டு பார்த்தார். நிவாரண முகாமில் இருக்கும் மக்களுக்காக சாம்பார் சாதம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் முதல்வர் ருசி பார்த்தார்.

பிரிஞ்சி சாதம்
பின்னர் கொளத்தூரில் பிரிஞ்சி சாதம் இருந்தது. அதையும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உணவின் ருசி நன்றாக இருப்பதாக தலையை அசைத்து சொன்னார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ள பாதிப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications