நோ கமெண்ட்ஸ்..ராமதாஸை சீண்டிய ஸ்டாலின்! எடப்பாடி கண்டிக்காதது ஏன்? பழசு கண்ணு முன்னாடி வந்து போகும்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது அக்கட்சியினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அண்ணாமலை, சீமான், தமிழிசை சௌந்தர்ராஜன், ஜிகே வாசன் உள்ளிட்ட பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக பேசவில்லை. இதற்கு பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்களை அதிமுகவினர் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

chennai edappadi palaniswami ramadoss

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வரிடம், அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்து உள்ளாரே, அதற்கு உங்களின் பதில் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர், "பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் முதல்வரின் பேச்சு பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முதல்வரின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ராமதாஸை முதலமைச்சர் விமர்சித்து பேசியது தவறு என சீமான், ஜிகே வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி ராமதாஸ் குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. மேலும் அதிமுகவினரும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க கூடாது என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்த போது அதிமுகவினர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். ராமதாஸ் குறித்த பேச்சுக்கு ஸ்டாலின், மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினாலும், மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என அமைச்சர்கள் சேகர் பாபு, சிவசங்கர் உள்ளிட்டோர் கூறினர். மேலும் சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாததால் தான் ராமதாஸை முதலமைச்சர் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பிரதான எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி ராமதாஸை முதலமைச்சர் விமர்சித்தது தொடர்பாக பேசவில்லை. இதற்கு பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்களை அதிமுகவினர் பகிர்ந்து கொண்டனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கடைசி நேரத்தில் கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என ராமதாஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. எடப்பாடியும் உடனடியாக அதனை நிறைவேற்றினார்.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் அதிமுக துரோகம் செய்துவிட்டது என ராமதாஸ் கூறினார். ஆனால் ராமதாஸ் கேட்டுக் கொண்டதால் தான் அப்போதைக்கு வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வருகின்றனர். சசிகலாவின் காலை பிடித்தவர் கரப்பான் பூச்சி போல் உருண்டு வருபவர் என விமர்சித்தனர்.

ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரை இப்படி பேசக்கூடாது என எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. தமக்காக பேசாதவர்களுக்கு நாம் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதால் தான் எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக பேசவில்லை.

மேலும் அதிமுக தயவால்தான் பாமகவினர் மீண்டும் சட்டசபைக்குள் சென்ற நிலையில் மக்களவைத் தேர்தலில் கடைசி நேம் வரை பேச்சு நடத்தி விட்டு, இறுதியில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துக் கொண்டதால், பாமக மீது கோபம் ஏற்பட்டதால் தான் எடப்பாடி பழனிச்சாமி ராமதாஸுக்கு ஆதரவாக பேசவில்லை என்கின்றனர் அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+